பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்41



“இந்த ஊரில் இளைஞர்கள் அழகானவர்கள். இத்தகைய அழகு எங்கள் ஊரில் எங்கே கிடைப்பார்கள்?”

“அழகைப் பற்றி அவள் கவலைப்படவில்லை; படித்த மாப்பிள்ளைதான் வேண்டும் என்கிறாள். இப்பொழுது பெண்களுக்கு அது பழக்கமாகிவிட்டது. தன்னைவிட அவன் கற்றவனாக இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.”

“எவ்வளவு படித்தவனாக இருக்கவேண்டும்?”

“இசையிலே வல்லவனாக இருக்கவேண்டும். என் மகள் வீணை வித்தகி ஆவாள். அவள் பாடும் குயில்; தன்னிலும் இசையில் வல்லவனாக இருக்க வேண்டும் தன் கழுத்தில் மலையிடுபவன் என்கிறாள்.”

“நான் என்ன செய்யவேண்டும்?”

“இதோ என் மகளை அழைக்கிறேன். அவளோடு நீங்களே பேசிக் கொள்ளலாம்.”

காந்தருவதத்தை கலுழவேகனின் மகள்; அவள் தந்தை அழைக்க அங்கு வந்து நின்றாள். சீதத்தன் விழித்த கண்ணை மூட மறந்து விட்டான்; பிறகு நினைவு வந்தது தான் தேவன் அல்ல என்று; இமை மூடினான்; திறந்தான்; ஒழுங்காக நடந்து கொண்டான்.

அவள் தந்தையையும் தாயையும் பார்த்தான்; தாயை அவள் அப்படியே உரித்து வைத்திருந்தாள்.

“உங்களைப் போலவே இருக்கிறாள்” என்று பாராட்டினான்.

தாரணிக்கு உள்ளம் குளிர்ந்தது. அந்தப் பாராட்டுத் தனக்குத்தான் என்பதில் அவள் சற்றுக் கருவமும் கொண்டாள்.

அழகுத் தெய்வம் தன் கண்முன் நிற்பது போல இருந்தது; எங்காவது ஏதாவது குறை இருக்கிறதா என்று