பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்47“அதை ஏன் கேட்கிறாய்? கானல் அடுத்த சோலை ஒன்றில் கட்டுமரம் என்னைக் கரை சேர்த்தது; அங்கே கலுழவேகனின் கையாள் தரன் என்பவன் என்னை அழைத்துச் சென்றான்; வித்தியாதரர் நகரைக் கண்டேன். இந்த வீணையரசியை நம்மோடு அனுப்பி வைக்கிறார்கள்” எனறான்.

அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தார்கள், இராசமாபுரத்தில் ஒரு இசைவிழா நடக்கும் என்றும், அதில் அவள் பாட வருகிறாள் என்றும் நம்பிக்கையோடு இருந்தார்கள். நாடக நட்சத்திரங்களை நயந்து காண்பதுபோல் அவளிடம் அணுகிப் பழக விழைந்தனர்; அவள் அவர்களிடம் அதிகம் பேசாமல் நாண் உடை நங்கையாகச் சாண் நின்றே பழகினாள்.

மரக்கலம் ஏறி நிலக்களம் அனைவரும் அடைந்தனர்; அழகிய இள நங்கையோடு சீதத்தன் வந்து இறங்கியதும் புது நாடகம் வந்தது போல் மக்கள் அதைப் பற்றியே பேசத் தொடங்கினர். “சீதத்தன் அழகியைத் தட்டிக் கொண்டு வந்து விட்டான்; இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்தச் சிறுமை” என்று அவன் பெருமையைக் குறைத்துப் பேசினர். பதுமையின் காதினைக் கடித்தனர் சிலர்; அதனைக் கேட்டு அவள் துடிதுடித்துப் போனாள். அவர் அப்படிப்பட்டவர் அல்லர்” என்று சொல்லி அவர்களை அகற்றி வைத்தாள்; வந்தவுடன் வெடிகுண்டு வெடித்தது.

“பொட்டிட்டுத் தட்டுக்காட்டி உங்களை வரவேற்கட்டும்மா?” என்றாள்.

கையில் தட்டில் ஆலத்தியும் கர்ப்பூரமும் ஏந்தி வந்து நின்றாள்.

“அம்மா தாயே! வலது கால் வைத்து வாடி அம்மா” என்று வரவேற்பு அளித்தாள்.