பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்57



சாம்பினர்; இந்த இசை விழா ஆறு நாட்கள் நடந்தன. வீறுகொண்டு அவளை வெல்லத் தக்க இளைஞர்ஏறு யாரும் முன்வரவில்லை.

சீதத்தன் செய்வது அறியாது திகைத்தான்; பதுமையும் மனம் கலங்கினாள். “அவளைக் கொத்திக்கொண்டு போக எந்தத் தத்திப் பையலும் வரவில்லை” என்று அவள் கவலைப் பட்டாள். விழாவிற்குத் தலைமை தாங்கிய கட்டியங்காரனும் நிலைமை அறிந்து வருந்தினான். “இவளைக் கட்டிக்கொண்டு போக எந்தத் தறுதலையும் கிடைக்க மாட்டான்” என்று உறுதியாக முடிவு செய்துவிட்டான். “மற்றும் ஒருநாள் பார்ப்பது. இல்லை என்றால் மூட்டை கட்டி அவளை அவள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது” என்ற முடிவுக்கு வந்தான். “விலை போகாத பண்டத்தை ஏலமா போட முடியும். போட்டிகள் வைக்காமல் யாராவது ஒருவன் அவளுக்கு மாலையிடலாம் என்று சொல்லலாம்” என்று எண்ணிப்பார்த்தான். அப்படிச் சொன்னால் “இந்த முட்டாள் பயல்கள் எல்லாம் அங்கேயே வெட்டிக் கொண்டு மடிவார்கள்” என்று அதைக் கைவிட்டான்.

“சீதத்தன் ஒரு மடையன், வீண் வம்பை விலைக்கு வாங்கி வந்துவிட்டான்; அந்தக்கொடி படர்தற்கு ஏற்ற கொம்பன் யார் வரப்போகிறான்” என்று பேசிக் கொண்டார்கள். “கணித்துச் சொல்லியவன் துணிந்து சொல்லியது தவறாது” என்ற நம்பிக்கை தத்தைக்கு இருந்தது. வந்திருந்த சொத்தைகளைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அரச குடும்பத்திலே இருந்தே பரிசுப் பொருளுக்கு உரியவன் வரவேண்டும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. பாஞ்சாலியின் கதை அவள் அறிந்ததே, மாபெரும் மன்னர்கள் கூடியிருந்த மண்டபத்தில் திரிபன்றியை எய்து வீழ்த்தக் கூடிய ஒரு வீரன் மன்னர் கூட்டத்தில் இருந்து வரவில்லை. அந்தணர் வேடத்தில் ஒரு