பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58சீவக சிந்தாமணி



அருச்சுனன் வராமல் போகமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

நாட்டு மக்கள் கட்டியங்காரனை வெறுத்தனர்: ஆட்சி ஒழுங்காக இருந்தால்தான் கலைகள் வளரும் மக்கள் அமைதியான வாழ்வு பெற்றிருந்தால்தான் அவர்கள் இசையை நாடுவர்; கொடுங்கோல் மன்னன் குடியிருப்பில் கடுங்கண் உடைய புலி கூட வாழ விரும்பாது. முற்றுப் பெறாத கதையாகி விடுமோ என்று வாசகர்கள் அஞ்சினார்கள். இது நாட்டுக்கே அவமானம் என்று கருதினர்.

இந்தச் செய்தி சீவகனுக்கு எட்டியது; காந்தருவ தத்தையை மணக்க வேண்டும் என்ற வேட்கை தோன்ற வில்லை. அந்நிய நாட்டில் இருந்துவந்த ஒருத்தி தன்னிகர் அற்றவள் என்று தருக்கி நடந்து செல்வதை அவன் மானப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டான்.

அதனால் தான் போட்டியில் பங்கு கொள்வது என்று முடிவு செய்தான். என்றாலும் அவன் தந்தை அவையில் முந்திக்கொண்டு உட்கார்ந்திருப்பதை அறிந்து மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்க அறிவும், திறமையும் மிக்க செயலும் உடைய புத்திசேனனை அவர் அனுமதி கேட்டு அறிந்துவர அனுப்பினான்.

கந்துக்கடனுக்குத் தன் மகனைப் பற்றி ஒரளவு தெரியும். கணிகையர் நடத்தும்ஆடல் அரங்குகளுக்கு அவன் சென்று வருவது அவன் அறிந்தது. முருங்கை முற்றினால் அது கடைக்கு வந்துதான் தீரும்; வயது முற்றியவன் அவன் காமக் களியாட்டங்களுக்குத் தன்னை ஈடுபடுத்தக் கூடும். அது தவிர்க்கப்பெற வேண்டுமானால் தத்தையைப் போல் அறிவுமிக்க அழகியை மணப்பது தக்கது என்று முடிவு செய்தான். அதனால் அவன் மறுப்புச் சொல்ல முன் வரவில்லை. என்றாலும் இந்தமாதிரி