பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்59சூழ்நிலைகளில் அவன் தற்காப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்தான்.

“அரசமகன் அழகி ஒருத்தியை மணக்கிறான் என்றால் மற்றைய சாதிக்காரர்கள் அடங்கிக் கிடப்பார்கள்: ஏனைய மன்னர்கள் வாய்மூடிக்கொண்டு அது தக்கது என்று கூறி வாழ்த்திவிட்டு வழி பார்த்துக்கொண்டு போவார்கள். வணிக மகன் ஒருவனுக்கு வாய்ப்பு வருமானால் அவர்கள் வாயைப் பிளப்பார்கள். கீழ்ச்சாதிக்காரன் மேல் சாதிப் பெண்ணை மணப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதுமட்டுமல்ல; கட்டியங்காரன் விட்டுக் கொடுக்க மாட்டான்” என்று யோசித்தான்.

நாகமாலை என்ற கணிகை ஒலை எழுதி அவனுக்கு இச்செய்தி தெரிவித்தாள்.

“சீவகன் அநங்கமாலையைத் தொட்டு அவளோடு தொடர்பு கொண்டான். வண்ணப்பொடிகளை வகையாக எப்படிப் பூசுவது என்பதை அறிந்தவன். அவள் நாட்டிய அரங்கு ஏறும் முன் அவளுக்கு வண்ணம்பூசி அவள் எண்ணத்தைத் துாண்டி இருக்கிறான்; ஒப்பனை செய்வதில் அவன் கற்பனை அதீதமானது. அவனை எப்படியாவது அடைவது என்று ஆசையை அவள் வளர்த்துக் கொண்டாள்”.

“இதனை அறிந்த கட்டியங்காரன் அநங்க மாலையைக் கண்டித்துப் பார்த்தான். தன் இச்சைகளுக்கு அவள் இணங்க மறுத்தபோது பச்சையாக அவளை இழுத்து வந்து கொச்சைப்படுத்தினான். அவள் நிச்சயம் தான் ஒரு நாளைக்குச் சீவகனை அடைவது உறுதி என்று வாய்விட்டுக் கதறினாள். அதனால் அவன் அவளைக் குதறினான். அவன் உள்ளத்தில் சீவகன்பால் தீராப்பகை கொண்டிருக்கிறான் என்பதை நாகமாலை அறியும் ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. கட்டியங்காரன்