60◊சீவக சிந்தாமணி
நாகமாலையின் படுக்கை அறைக்கு வந்தபோது அவன் தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் வெளிப்படுத்தினான். “சீவகனை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன்” என்று அவளிடம் சூள் உரைத்து இருக்கிறான். அதனால் இங்கே வரும்போது சீவகன் தக்க பாதுகாப்போடு வரவேண்டும்” என்று ஒலையில் எழுதி அனுப்பினாள். அவள் தோழி ஒருத்தி அதைக் கொண்டுவந்து கந்துக்கடனிடம் தந்தாள்.
செய்தி கேட்ட சீவகன் “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது; அந்த ஒநாய் நம்மை ஒன்றும் செய்யாது; அஞ்சவேண்டியதில்லை” என்று அறிவித்து அனுப்பினான்.
சீவகன் அவைக்கு வந்ததும் அரங்கமே களைகட்டியது; கட்டியங்காரன் பார்த்தான்; வியர்த்தான்; “இந்த முரட்டுக்காளை இங்கே ஏன் வந்தது? அவளை இவன் தட்டிக் கொண்டு போகக்கூடும்” என்று அஞ்சினான்; அவையைக் கலைத்துவிடலாம் என்றும் சிந்தித்தான்; இருந்தாலும் அவனுக்கு ஒரு நம்பிக்கை இவனால் அவளை இசையில் வெல்லமுடியாது என்று. “அரசர்கள் எல்லாம் கடையைக் கட்டிவிட்டுப் போய் விட்டார்கள்: வணிகமகன்; இவனுக்குக் கூட்டல் கழித்தல் தெரியுமே அன்றி வகுத்தல் பெருக்கல் எப்படித் தெரியும்? இசையை இவன் எப்படி எங்கே சுற்றிருக்க முடியும்? அப்படி இசையில் வல்லவனாக இருந்திருந்தால் அநங்கமாலையின் நாட்டியத்தின்போது தன் பாட்டியல் கலையைக் காட்டி இருக்கலாமே” என்று அவன் அசதியாக அமர்ந்திருந்தான்.
காமனை ஒத்த கட்டிளங் காளையாகிய சீவகனைக் கண்ட காரிகையர் காந்தருவதத்தையைக் கடிந்து கொண்டனர்.
“கொடுத்து வைக்காதவள்; கெடுத்துக் கொண்டாள்; இசைப்போட்டியில் அவன் வெல்லாவிட்டால் அவள்