பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62சீவக சிந்தாமணிஅவன் காட்ட வாய்ப்புகளை ஏற்படுத்தினாள். பல் வகை யாழ்க் கருவிகளை ஒன்றன்பின் ஒன்று எடுத்து முன் வைத்தாள்.

“இந்த யாழ் அறிவற்றவர்களைப்போல மெல்லிதாக இருக்கிறது” என்று கூறினான்.

மற்றொன்று வைத்தாள். “இது அழுகல், அழுமூஞ்சிகளைப் போன்றது. இது” என்றான். மற்றொன்று வைத்தாள்.

“இது வடுப்பட்டது; சான்றோர்கள் தம் சால்பு குன்றியது போன்றது” என்றான். மற்றொன்று காட்டினாள். “கரிந்தது; இடிபட்டு முறிபட்டது” என்றான்.

இப்படி வைத்ததற்கு எல்லாம் ஏதாவது குறை காட்டிக் கழித்தான்.

புடவைக் கடையில் பெண்கள் ஒதுக்குவது போல் ஒவ்வொன்றாக ஒதுக்கி வைத்தான்.

ஒரு யாழ் தத்தையைத் தொடுவதுபோல் இருந்தது அவனுக்கு, “நங்கையின் நலத்தது” என்றான். இதைக் கேட்டதும் தத்தையின் உள்ளம் குளிர்ந்தது. யாழுக்குத் தன்னை உவமித்து மதிக்கிறான் என்று கொண்டாள்.

நங்கை என்று தன்னைச் சொன்னானா பொதுவாக ஒரு மங்கையக் குறித்தானா என்று தடுமாறினாள்; என்றாலும் அவன் ரசனையை மதித்தாள்.

மகளிரை மதிக்கும் மாண்பு அவனிடம் உள்ளது என்று அறிந்தாள்.

மூக்கு மட்டும் சற்று எடுப்பாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதுபோல் அவ் யாழின் நரம்பில் மயிர் ஒன்று சிக்கிக் கிடப்பதை எடுத்துக் காட்டினான். அருகில்