பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தருவ தத்தை இலம்பகம்65
 


“அவள் ஒழுங்காகக் குடும்பம் நடத்த வேண்டுமே.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“கந்தருவப் பெண்கள் இவனைவிடப் பேரழகர்கள் கிடைத்தால் அவர்கள் பின்னால் போய்விடுவார்களே”

“இவனைவிட மேலானவர் யாரும் கிடைக்க மாட்டார்கள், மன்மதனே வந்தாலும் இவனிடம் அழகில் மண்டி இட வேண்டியது தான். முருகனைப் போன்ற அழகும் வீரமும் படைத்தவன்; அவனை விட்டு எந்தப் பெண்ணும் பிரியமாட்டாள்” என்று இந்த மணத்தைப் பற்றிப் பல கோணங்களிலும் விமர்சித்தனர்.

நிலவின் ஒளி கட்டியங்காரனைச் சுட்டு எரித்தது; அதனால் அவனிடம் புகை கிளம்பியது.

“எங்கே வந்தாலும் இந்த இளைஞன் போட்டிக்கு வந்து விடுகிறான்; எந்த அழகியும் இவனை விட்டு வைக்க மாட்டாள் போல் இருக்கிறது. அநங்கமாலையை என்னிடமிருந்து நீக்கியவன் இவளோடு இவன் வாழக் கூடாது” என்று அழுங்கினான்; மனம் புழுங்கினான்.

அங்கு வந்திருந்த அரச குமாரர்களைத் துண்டி விடுவது என்று திட்டமிட்டான்; அவர்களும் அவள் கிடைக்க வில்லையே என்று வெந்து கொண்டிருந்தனர். “மனோன்மணிய நாடகத்தில் சீவக வழுதி படை வீரர்களை நோக்கி நாட்டுப் பற்றை ஊட்டிச் சொற் பெருக்கை நிகழ்த்தியது போல இவன் அவர்களை விளித்து அவர்கள் மானத்தைத் துரண்டி விட்டான். தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் வழக்குத் தொடுப்பது போல் இவன் புதிய வழக்கைக் கிளப்பினான்.

“அடிப்படையில் இந்தப் போட்டி நியாயமற்றது; பாட்டுப்பாடுகின்றவனுக்குத் தான் ஒரு பெண் உரிமை என்றால் பாகவதர்கள் எல்லாம் அரச குமாரிகளை அடை