பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குணமாலையார் இலம்பகம்69
 


பார்த்தேன்” என்றது மயில், கருடன் சொல்லியது “பாம்பு தீராதபகை, அதைக் குத்திக் கொல்லும் உரிமை எனக்குத் தான் உண்டு” என்று ஆணையிட்டுக் கூறியது; இச்சண்டையில் பாம்பு தப்பித்துக் கொண்டது. இவை இரண்டும் அதற்குப் பிறகு பேசியதே இல்லை.

ஊரிலே திருவிழா; இளவேனிற் பருவம் வந்தது. ஆட வரும் பெண்டிரும் குடும்பம் குடும்பமாகச் சோலையையும் அருகிருந்த நீர் அருவியையும் நாடிச் சென்றனர். சோற்று மூட்டை கட்டிக்கொண்டு வேற்று நாட்டுக்குச் செல்வது போல் சென்றனர். சிறப்பாக அரும்புகள் அங்கே விரும்பிச் சென்றனர். சுரும்புகள் அவற்றை நாடிச் சென்று வட்ட மிட்டன. கன்னியர்கள் அன்னையரின் காவலைக் கடந்து தன் ஆவல் தீரக் காதலிக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது; மனமானவர்கள்; வீட்டில் ஒரே மாதிரி உணவு உண்டவர்கள்; அதே உணவை வேறு வகையில் சுவைத்து உண்டனர்; பத்தினிப் பெண் ஆனாலும் அவள் வந்து பத்துமினியாகக் காட்சி தந்தாள். சோலை நிழல்களில காதலர்கள் பேசிக் கதைகள் அளந்தனர்; காரணம் இல்லாமலே சிரித்தனர். சிடுமூஞ்சிக் கணவர்கள் கூடச் சிரித்து விளையாடிக் குதூகலம் அடைந்தனர்.

முத்துப்பல்லக்கில் பிறர் சுமக்கச் சென்றனர் இளங் கன்னிகைகள்; மற்றவர் பாடிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும், குதிரை பூட்டிய தேர்களிலும் அவரவர் அந்தஸ்த்துக்கு ஏற்ப அங்குச் சென்று குழுமினர். காளைப் பருவத்து இளைஞர்கள் தம் தோழருடன் இயற்கைக் காட்சியோடு இனிய மகளிரைக் கண்டு மகிழ இதை வாய்ப்பாகப் பயன்படுத்தினர்; சிட்டுக் குருவிகள் பறக்கின்றன என்று பட்டுப் பூச்சிகளைச் சுற்றி வட்டமிட்டனர்.

குணமாலை தான் கொண்டுவந்திருந்த சுண்ணத்தை எடுத்துக் காட்டி அதன் பொன் வண்ணத்தைச் சிறப்பித்துப்