பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்71செம்பொன் கொடியனைய சேடியர் இருவர் தனித் தனித் தட்டு ஏந்திக் காளையர் சிலர் முன் நீட்டினர்; அவர்கள் தட்டைப் பார்க்கவில்லை.

“இதைப் பாருங்கள்” என்றனர்.

“உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்” என்றனர். அவர்கள் சிரித்தனர்.

“எம்முடைய தலைவியர் பெரிய வீட்டுப் பெண்கள்; அவர்களுக்கு இந்தச் சிறிய விளையாட்டுகள் பொழுது போக்கு அவர்கள் தம் கையால் இடித்துப் பூசிக் கொள்ளும் சுண்ணம் இது; எது இவற்றில் சிறந்தது என்று கேட்கின்றனர்.”

“நாங்கள் வணிகச் சிறுவர்கள்; கோமுட்டி சாட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறீரா? யாரையும் புண்படுத்த மாட்டோம். முன் பக்கம் பார்த்தால் செட்டியாருடையது; பின்பக்கம் பார்த்தால் ரெட்டியாருடையது என்று சொல்லிப் பழக்கம். அதனால் கோமுட்டி சாட்சி என்ற சொல் வழக்கே உண்டாகி விட்டது. இது சிறப்பாக இருக்கிறது என்றால் மற்றொருவர் விறைப்பார்கள்; எங்களுக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு: நாங்கள் நல்ல பிள்ளைகள்” என்றார்கள்.

“நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” என்று அவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.

“உங்கள் முடிவுதான் என்ன?”

“இரண்டும் நன்றாக இருக்கிறது”

“இதைச் சொல்லவா உங்களிடம் வந்தோம்”

“மற்றொன்று சொல்கிறோம்; சுண்ணம் எப்படி இருந்தால் என்ன? அதைப் பூசிக் கொள்பவர் வண்ணம் அழகாக இருந்தால் அதுவே மெச்சத்தகுந்தது” என்றனர்.