பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்73“அதனால் காமச்சுவை என்பது உமக்குக் கைவந்த கலையாக இருக்கும் எனக் கருதுகிறோம்.”

“கவிச்சுவையில் அதைக் காணும்போது அது தவறு இல்லை; புவிச்சுவையில் தான் காணக் கூடாது” என்றான்.

“பூக்களிள் ரசிகன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்”.

“யாரோ திரித்துச் சொல்லி இருக்கிறார்கள்; பூவையர் என்பதை மாற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.”

“சரி சுண்ணத்துக்கு வருகிறோம்; எது நலம் வாய்ந்தது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?”

“கோடையில் இடித்துத் துகள் செய்தது வாடை மிகுந்து வீசும்; மாரியில் இடித்தது மங்கிப் போகும்” என்றான்.

“அதை எப்படிப் பிரித்து அறிவது?”

“பூக்களின் ரசிகர்கள்; இங்கு இந்தச் சோலையில் சதா சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விட்டால் அவர்கள் அதைத் தொட்டால் அது உயர்ந்தது என்று கருத்தாகும்.”

“அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?”

“உங்கள் தலையில்”

“என்னய்யா கிறுக்காகப் பேசுகிறீர்”

“சுருக்கமாகப் பேசினேன்; உங்கள் தலையில் என்ன சூடி இருக்கிறீர்கள்.”

“பூக்கள்”

“அதைச் சுற்றித் திரிவது யார்?”

“ஒன்று வண்டுகள்; இல்லாவிட்டால் சில மண்டுகள்”.

“அந்த வண்டுகளைத் தான் நான் சொல்கிறேன். மனித சாதியில் நான்குவகை சாதி உண்டு; அதே போல்