பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74சீவக சிந்தாமணி
 


வண்டிலும் நான்கு இனங்கள் உண்டு, வண்டு, ஞமிறு, தேன், சுரும்பு என்பவையாகும். இவை மானிடர்போல் ஒரு பக்கம் சாயமாட்டார்கள்; நீதிபதிகளை நீங்கள் விலைக்கு வாங்கி விடலாம்; இந்த அம்பிகாபதிகளை நீங்கள் விலைக்கு வாங்க முடியாது”.

“வழக்குமன்றம் தொடரலாமே”.

“நீதிபதிகள் நால்வர்; இதை உங்கள் மொழியில் சொன்னால் ‘கூட்டுநீதிபதிகள்’ என்பீர்கள்; அவற்றிற்கு இந்தப் பொடியை ஊட்டிப் பார்த்தால் அவை உண்மையைக் காட்டிவிடும்” என்றான்.

சுண்ணப் பொடியை மேலே தூவினர்; குணமாலையின் துகள் காற்றில் மேலே பறந்தது; சுரமஞ்சரியின் துகள் ஈரச் சுமையில் தரையில் இறங்கியது. இதைக் கண்டு வியந்தனர்.

“அது பறக்கும் விமானம்; இது இறங்கும் விமானம்” என்றான்.

“எது உயர்ந்தது?”

“உயரத்தில் பறப்பது”

“எப்படிச் சொல்கிறாய்?”

“கோடையில் உலர்ந்தது மேலே சென்றது; மாரியில் ஈரம்பட்டது; அது சோர்வு கண்டது; கீழே படிந்தது.”

“முடிவு?”

“வண்டுகள் மேலே பரவிய சுண்ணத்தைச் சுற்றி அவற்றைச் சுவைத்தன; சுரமஞ்சரியின் சுண்ணத்தைத் தொடவே இல்லை; அதனால் வண்டுகள் தந்த தீர்ப்பு இது” என்பதைக் காட்டினான்.

“அது எப்படி நீங்கள் வண்டுகளை விளித்தீர்”