பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்75“வண்டுகளுக்குத்தான் மணத்தைக் கண்டு சொல்ல முடியும். நீங்கள் திருவிளையாடற் புராணம் படித்திருக் கிறீர்களா?”

“நாடகம் பார்த்திருக்கிறோம்”

“நக்கீரருக்கும் சிவனார்க்கும் நடக்கும் வாதம்; தன் காதலியின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையா என்பது அந்த வாதம்; அந்தப்பாட்டுச் சொல்கிறேன் கேளுங்கள்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே”

“நீ பல பூக்களைச் சுற்றி வந்திருக்கிறாய்; என் தலைவியின் கூந்தலைவிட மணமுள்ள பூ நீ கண்டது உண்டோ” என்று வினவுகிறான் அந்தப் பாட்டுக்குரிய தலைவன்”

“அதைப் படித்ததால் தான் இது நினைவுக்கு வந்தது. வண்டுதான் எதையும் கண்டு சொல்ல முடியும் என்பதை அப்பாட்டுக் கொண்டு நான் அறிந்தேன்” என்றான்.

“கற்ற கல்வி உனக்குக் கை கொடுத்து உதவி இருக்கிறது” என்று அத்தோழியர் பாராட்டிச் சென்றனர்.

பதில் கடிதம் வரும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் களைப் போலச் சேடியர் தக்க தீர்ப்புக் கொண்டு வருவர் என்று இருவரும் காத்துக் கிடந்தனர்.

குணமாலைக்குத் தான் வெற்றி என்று அறிவித்தனர். சுரமஞ்சரிக்கு வந்தது கோபம்; ஏற்பட்டது மனஸ்தாபம்.

“அவன் என்னைவிட உன்னைத்தான் ரசிக்கிறான்; இந்தச் சுண்ணத்தைக் கொண்டு அவன் பாராட்டுதலை நீ