பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குணமாலையார் இலம்பகம்85
 

அவள் தீட்டிய சித்திரம் கண்டு அவள் மனப்போக்கின் விசித்திரத்தை அறிந்து கொண்டது.

குறிப்பறிந்து செயல்பட்டது. நேரே யானையை அடக்கிய வீரன் இருந்த சோலையை முகவரியைக் கேட்டு யாரையும் விசாரிக்காமல் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழிக்கேற்ப இவன் நிச்சயம் சோலையில் தான் இருப்பான் என்பதைத் துணிந்து அங்குச் சென்றது.

“கன்னியர் உற்ற நோய் கண்ணினும் இனியவர்க்கும் எடுத்து உரையார்; யானும் என் வாயால் இதை எடுத்துச் சொல்லமாட்டேன் கற்றவன் நீ உற்ற நிகழ்ச்சியைக் கொண்டு சற்று எண்ணிப் பார்த்து நீயே அறிந்து கொள்ள வேண்டும்.”

“ஒரு பெண்ணைத் தொட்டுவிட்டால் யாரும் அவளைக் கட்டிக் கொள்ளமாட்டார்கள். நீ மெதுவாக அவளைப் பிடித்து இழுத்து இருக்கலாம்; நீ அவளை இறுகத் தழுவி அவளைக் கசக்கி விட்டாய்; அவள் மிகவும் மெலிந்து விட்டாள். அவளை நீ தான் மணக்க வேண்டும், அது இந்த உலகியல்” என்றது.

“கசக்கினேன்; முகர வில்லையே” என்றான். “நுகரலாம்; அதை எடுத்து உரைக்கத்தான் பறந்து வந்தேன்; சிறகு பெற்றுவந்தேன்; சிறகு பெற்றதன் பயன் இன்று தான் கண்டேன்” என்றது.

“அஞ்சல் முடங்கல் எடுத்து வந்த அஞ்சுகமே! அவள் சுகம் விரும்பி அவளை மணப்பேன்; அவள் தந்தை பேராசைக்காரனாக இருந்தால் பொன்னும் பொருளும் கொண்டு வந்து பரிசமாகக் குவிப்பேன். இனி அவளுக்குத் தவிப்பு ஏன்? அவளுக்காக என்றும் காத்திருப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.

“ஆழ்க் கடலுக்கு அப்பால் அசோக மரத்தின் அரு நிழலில் சோகமே வடிவம் கொண்டிருந்த அணங்குக்கு