பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்87



கொண்டிருக்கும் அழகர்பால் தூது விட்ட அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலையும் கிளி படித்திருக்கிறது. அதற்குப் பிறகு தான் கிளிகளுக்கு இந்த உத்தியோகம் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர் சொல்ல அதையும் கேட்டிருக்கிறது.

குணமாலையின் தாய் நேரத்துக்கு நேரம் டி.வி. திருப்பிக் கிரிக்கட்டு ஸ்கோர் கேட்பது போல அடிக்கடி வந்து அவள் நிலையைக் கேட்டு அறிந்து வந்தாள். கிளியைக் கேட்டு அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள ஆவல் காட்டினாள். எனினும் இந்தச் சிறு பிள்ளையிடம் அவ்வளவு தூரம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அடக்கிக் கொண்டாள். நாளைக்கு அது தன்னை மதிக்காது என்பது தெரியும். மேலும் அது தொலை பேசியில் இருவர் பேசிக்கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்பது போல் ஆகிவிடும்; தன் நிலையைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

மூலவரையே கேட்டுவிட்டால் போகிறது; அவள் துயரத்துக்கு மூல காரணம் யார் என்று தெரிந்து கொள்ள முற்பட்டாள்.

“இன்று மூன்றாம் பிறை யாயிற்றே; பிறை தொழப் போகவில்லையா” என்று கேட்டாள்.

“இறையை வழிபட்டுவிட்டேன்; பிறையை வழிபடத் தேவை இல்லை” என்றாள்.

அவள் பேச்சு மணமானவள் போல் இருந்தது; “கற்புடைய பெண்டிர் தெய்வத்தைத் தொழத் தேவை இல்லை” என்று வள்ளுவர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது.

“உன் மாமன் மகன் பெண் கேட்க வரப் போகிறான்; உன்னைச் சீர் செய்து கொள்” என்றாள்.