பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90சீவக சிந்தாமணிஎண்ணிப் பார்த்தான். அது தனக்கே ஒரு வேளை இடையூறாக அமையுமோ என்று அதைக் கைவிட்டான். கணிகையர் கணக்கில் எடுப்பது இல்லை என்பதால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்டான். அப்படி ஒரு சட்டம் போட்டிருந்தால் சீவகன் ஒருவனாலேயே அந்நாட்டுக் கன்னியர் எதிர்த்திருப்பர் என்பதை அவன் எண்ணிப் பார்க்கவில்லை.

இந்தக் குணமாலை அவளை இவன் தட்டிக் கொண்டு போவதை எப்படி விட்டு வைக்க முடியும். ஏதாவது குற்றம் அவன் மீது சுமத்த வழி இருக்கிறதா என்று பழி நோக்கி இருந்தான்.

அவனைப் பார்க்க யானைப்பாகர்கள் வெளியே காத்து இருந்தனர்.

“யார் அங்கே!”

“பாகர்கள்”

“செய்தி?”

“யானை மறுக்கிறது. உணவு உட்கொள்ள வெறுக்கிறது”

“கரும்பு கொஞ்சம் அதிகம் கொண்டு வந்து போடுவது தானே”

“அதையும் அது விரும்ப வில்லை”

“காரணம் ?”

“அது தன் கற்புக்குப் பங்கம் வந்து விட்டது என்று தனிமையில் புலம்பிக் கொண்டு இருக்கிறது”

“யார் அதைக் கெடுத்தது”

“சீவகன் அதைத் தொட்டுவிட்டான்; அதனால் அது புலம்புகிறது”