பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 O வல்லிக்கண்ணன் சாலை மரங்கள் ஒவ்வொன்றாய், பலவாய் மொட்டை. படிக்கப்பட்டன. பட்டை உரிக்கப்பெற்றன. வெட்டி, வீழ்த்தப்பட்டன~ ஆட்டு மந்தைகளுக்காகவும், விறகு வகை களுக்காகவும். . காலமும் துணை புரிந்தது. சாலை வெறும் ரஸ்தா- மரம் எதுவுமில்லாத கட்டாத்தரை வழி- ஆயிற்று, குளம் அடிக்கடி வறளலா விந்து. நெல் வயல்கள் சரியாகப் பலனளிப்பதில்லை என்ற முனகல் வளர்ந்தது. அந்நிலையிலேதான், ஊருக்கு மேற்கே, இரண்டு மைல் துரத்துக்கு அப்பால், வறண்ட சூழலாய், முட்செடிகள் தவிர வேறு பயிர் எதுவும் தலைகாட் வசதி செய்யாத இடமாய் காய்ந்து கிடந்த வேறும் பரப்பிலே கட்டிடங்கள் முளைத்தன. இயந்திரங்கள் குவித்தன. புகைக்கூண்டு வளர்ந்தது. சிமிண்ட் ஆலை தோழில் புசியத் தொடங்கியது. பலபேருக்கு வேலை கிடைத்தது. சிவபுரம்வாசிகளில் அநேகருக்கும் தான். ஆகவே அந்தத் தொழிற்சாலையை வாழ்த்தினார்கள் பலரும். நன்மைகளுக்கு இடமளித்த அந்த ஆலையினால் பெரும் தீமையும் தோன்றிவிட்டது என்பதை அக்கம் பக்கத்து ஊரார் உணர வெகுகாலம் தேவைப்படவில்லை. படுத்துக்கொண்டே புகைக்கும் ஒரு அசுரன் வாய்ப் பெரும் சுருட்டுப்போல நெடிதுயர்ந்து வானோக்கி நின்ற புகைப்போக்கி (கில்லன்' சதா வெளியேற்றிக் கொண்டிருந்த வெண்புகைச் சுருள்கள் பறந்தன; படர்ந்தன; பரவின; படிந்தன. அவை பட்ட இடமெல்லாம் வெண்துரசி. சிமிண்டுத் து:சி. அதன் வீச்சு எட்டு மைல்களுக்கு அப்பால் உள்ளி: