பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 O வல்லிக்கண்ணன் தன்னைப் பற்றி அவள் எண்ணிக் கொண்டிருப்பாள்; தன்னை அவள் மறந்துவிட முடியாது என்று ஏகநாதன் திடமாக எண்ணினார். காலம் அதன் இயல்புப்படி ஓடியது. நான்கு வருடங்கள் போப் மறைந்தன. ஏகநாதன் அவருடைய ஊருக்கு வந்திருந் தார். வெண்ணிலாவும் வந்திருப்பதாக அவர் அறிந்தார். கவிஞரின் உள்ளம் கூத்தாடியது. தன்னுள் மகத்தான உணர்வுகளைத் துண்டி, தன்னை ஒரு கவியாக வளர்த்து விட்ட சுந்தர கனவை இம்முறை நேரில் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்று அவர் உறுதி பூண்டார். அவளுடைய அழகுத் திருஉருவத்தை நினைத்து நினைத்து சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தார். - வெண்ணிலா அவர் பார்வையில் பட்டாள்; வாசல் நடை வில் தான் வழக்கம்போல் காட்சி தந்தாள். கவிஞருக்கு ஒரு அதிர்ச்சி. குளிர்பூம்புனல் ஒடையில் பூத்தவண்ண மலர் என்றும், இளம் காற்றில் தெளிந்து ஆடும் மென்கொடி என்றும், சன்னலின் பின் நின்ற மின்னல் இளம் கொடி என்றும் அவர் வர்ணித்த பெண்ணாக இல்லை இந்த வெண்ணிலா, காலம் சில பேரை எப்படி சதைப் பிண்டமாக மாற்றி விடுகிறது என்று எண்ணியது. ஏகநாதன் மனம், நாலு வருடங்கள், வசதியான வாழ்க்கை. கவல்ை இல்லாத, உழைப்பு இல்லாத ககசீவனம். வெண்ணிலா குதிர் போல வளர்ந்திருந்தாள். இருப்பினும் பரவாயில்லே; பேசிவிட வேண்டியது தான்; என்ன வெண்ணிலா, நலம்தானா என்று கேட்டுப் பேச்சை ஆரம்பிக்கலாம் என நினைத்து ஏகநாதன் தெருவில் நடக்க リア蘇『リ。 - : முதலில் தனியாக நின்ற வெண்ணிலா அருகே இன்னொ ருத்தி வந்து சேர்ந்தாள். அவளுடைய உறவுப்பெண்ணாக