பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 93 இருக்க வேண்டும். வெளியூரிலிருந்து வந்தவளாக இருக்க லாம். - "யாரு இந்த ஆளு? இதை உனக்குத் தெரியுமா? தெரிஞ்ச ஆளு மாதிரி சிரிச்சுக்கிட்டு உன்னையே முழிச்சுப் பார்த்தபடி போகுதே?’ என்றாள் அவள், தனித்து நின்றவனிடம் பேசலாம் என எண்ணிய ஏக நாதன், இன்னொருத்தியும் வத்து நிற்கவே, பேச்சு கொடுக்கத் துணியாமல், வழியோடு நடந்தார். வெண்ணிலாவை பார்த்த படியே தான் போனார். பெண்களின் பேச்சு அவர் காதில் தெளிவாக விழுந்தது. வெண்ணிலா சொன்னாள்

  • இதா! இது சரியான லுரசு, கவிதை எழுதுறேன், பாட்டு எழுதுறேன்னு சொல்லி, பொம்பிளைகளைப் பற்றி என் னென்னவோ கிறுக்கி வைக்கும். இது கூடச்சேர்ந்த லூசுகள் அதை சுத்திக்கிட்டுத்திரியும்...'

'நல்ல தமாஷ் தான் போ!' என்று கூறிச் சிரித்தாள் கூட நின்றவள். . - வெண்ணிலாவின் தோற்றம் தந்த அதிர்ச்சியை விடப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது அவள் பேச்சு. இவளை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனே! இந்தச் சந்திப்பு நிகழாமலே இருந்திருக்கலாம். என் உள்ளத்தின் கனவுகள் சிதையாமலாவது இருக்கும் என்று நினைத்தபடி நடத்தார் ஏகநாதன். காதல் கண்லெழுப்பிக் கவிதை தந்திடும் கலைச் சகுத்தலை நிகர் பெண்னை அவர் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் கொள்ளவே: யில்லை; - * - ロ