பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 0 அல்லிக்கண்ணன் வழக்கத்துக்கு விரோதமாக, அதிகாலையில் எழுந்தான் "பச்சத் தண்ணியில் குளித்தான். சுத்தமான ஆடை அணிந்து: சாமியைக் கும்பிட்டான். அம்மா லச்சுமி, இன்று காலையில் இன்ன? ஆகாரம்?' என்று அன்பாக மனைவியிடம் விசாரித்தான். அவளுக்கே எதையும் தம்ப முடியவில்லை. துரக்கக் றக்கமோ, குடி மயக்கமோ, மூளைக் குழப்பமோ என்ற சந்தேகம். எழுகிறபோதே, ஏ. சவத்து முண்டை, ஏ தேவடிவா, ஏ. அவளே இவனே என்று வாயில் வந்தபடி பேசும் சுபாவம் பெற்றிருந்த பருஷன்காரன்- நாள் பூராவும் குளிக்காமன் கழுதை மாதிரி அலைந்து திரிந்துவிட்டு, சாயங்காலமாக வந்து வேந்நீர் போடும்படி அதிகாரம் பண்ணி, குளிப்பதையே ஒரு பெரிய சடங்காக நடத்தக் கூடிகலன்- இன்து அமைதியாகக் குளித்து அருமையாகப் பெயர் சொல்வி அழைத்துக் குழைகிறான் என்றால்? அவள் விழிகள் அகல, வாய் பிளந்து அவனையே ஆதிசங்:ாக பார்த்து தின் தான். ‘என்னம்மா? வீட்டிலே ஒண்னும் இல்லையா? அதைச் சொல்லேன்-சரி சரி, நான் ஒட்டவில் பார்த்துக் கொள் கிறேன்’ என்று கிளம்பினான். இப்படி அமைதியாக அவன் பேசி அவள் கேட்டதே இல்லை. இல்லை என்றால், ஏண்டி இல்லே?" என்று கேட்டு, ஆயிரம் கெட்ட வார்த்தைகள்' அர்ச்சனை பண்ணி, முதுகில் இரண்டு கும்’கள் கொடுத்துவிட்டுத்தான் வெளியேறுவான். அவனுக்கு என்ன வந்துவிட்டது திடீரென்று? ‘லச்சுமி. இன்னைக்கு மத்தியானம் ஜோராக சாப்பாடு தயார் பண்ணிவை, உருளைக்கிழங்குப் பொரியல், வெங்காய சாம்பார், அப்பளம் எல்லாம் இருக்கட்டும். இத்தா ரூபாய்