பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 183 என்று ஐந்து ரூபாய் நோட்டை அவளிடம் கொடுத்துவிட்டு அவன் போனான். - கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிக்கலியே? என்று சந்தேகத்துடன் வெளியே வந்து பார்த்தாள் அவள். -உலகம் வழக்கம்போல்தான் இயங்கிக் கொண்டிருந்தது. முத்துமாலைதான் மாறியிருந்தான். என்ன கூத்துக்கோ இது!’ என்று எண்ணினாள் அவள். முத்துமாலையின் அனுபவ வட்டாரத்தில் எதிர்ப்பட்ட அனைவரும் இப்படித்தான் எண்ணினார்கள். ஒட்டலில், மேஜை துடைக்கிற பையன் கை தவறு தலாகத் தண்ணீர் தம்ளரைத் தட்டிவிட்டான். தண்ணீர் முத்துமாலையின் வேஷ்டியை நனைத்துவிட்டது. அங்கிருந் தவர்கள் எல்லோரும் பையனுக்கு சனியன் பிடிச்சிருக்கான். இப்ப தொலைஞ்சான்!” என்றே கருதினர். பையன் நடுங்கினான். முத்துமாலையின் கோபம், தன் மூஞ்சியில் அடியாக மலருமா, முதுகில் முத்துகளாகப் பாயுமா, சுடச் சுட ஆவி பறக்கும் சாம்பார் தட்டோடு தன் தலைமீது கொட்டப்படும் செயலாகப் பரிணமிக்குமா என்று குழம்பிய படி, கும்பிட்டு நின்றான். முத்துமாலை தண்ணீரை, தம்ளரை, வேட்டியை, பையனை பரிதாபமாக நோக்கினான். "ஏன் தம்பி, ஜாக்கிரதையாக வேலை பார்க்க வேணாம்? உம் உம்.துடை சீக்கிரம். ஏன் இப்படி நிற்கிறே? என்று சாதாரண மாகச் சொன்னான். - - அதிசயத்திலும் அதிசயம் இது. அங்கிருத்தவர்கள் அனைவரும் திகைப்படைந்தார்கள். முத்துமாலைதானா இது முத்துமாலையா இப்படி நடந்துகொண்டான்? அவர்களுடைய கண்களையும் காதுகளையும் அவர்களா லேயே நம்ப முடியவில்லை. - ஒட்டல் முதலாளிகூட திகைத்துப்போனார். அந்த ஒட்டலிலேயே அல்ப காரணங்களுக்காக எவ்வளவு பெரிய