பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 g வல்லிக்கண்ணன் கலாட்டா எல்லாம் பண்ணியிருக்கிறான் இந்த சிங்கக்குட்டி: இப்போது ஹரிஹறி. பையன் ஏதோ தெரியாத்தனமாக...?" என்று ஞஞ்ளு மிஞ்ஞ. பண்ணி 'ஐஸ் வைக்க முன் வந்தார் அவர். - முத்துமாலை சிரித்தான் அவனும் மனுசப் பிறவிதானே. மிஷின் இல்லையே! கை தவறுவது சகஜம். மனுசன் என்றால் தப்பு செய்யாமல் இருக்க முடியாது. இந்த சின்னத் திப்பை எல்லாம் பெரிசுபடுத்துவது என்றால், அதிலே மனுசத்தன்மை என்ன இருக்கும்? என்றான். முரட்டு முத்துமாலையா இப்படி பேசுகிறான்? ஆச்சர்யப்படாதவர் யாருமே இல்லை அங்கு. அன்று அவன் இந்தவிதமாக ஊர் பூராவையும் ஆச்சரியத்தில் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தான், தனது தோன்களினாலும் செயல்கள் மூலமும். அன்று மத்தியானம் அவன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, லட்சுமியின் சமையலை பாராட்டிப் பேசி, அவளை பும் சாப்பிடும்படி உபசரித்துவிட்டு ஒய்வாகப் படுத்தான். இதுதான் சமயம் என்று அவள் அவனிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தாள். என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கீங்களே இன்னைக்கு? என்று ஆரம்பித்தாள். - முத்துமாலை லேசாகச் சிரித்தான். என்ன ஒரு மாதிரிசி என்றான். பிறகு சொன்னான்: நான் தினசரி நடந்து வந்திருக்கிற விதம் ஒழுங்கானதில்லை. அது எனக்கே தெரியும், ஐயா ஞானப்பிரகாசமும் அடிக்கடி சொல்வாரு” "யாரு அந்த ஐயா? என்று கேட்டாள் மனைவி. 'நல்ல அறிவாளி. ரொம்ப நல்ல மனுஷன். யாருக்கும் கேடு நினைக்கமாட்டார். பரோபகாரி. படிக்கிறதும், நல்ல விஷயங்களைப் பற்றி நினைக்கிறதும் பேசநிதும்.அவர் குணத்தை மெச்சாதவங்க கிடையாது."