பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 105 சரி சரி. அவரு என்ன சொன்னாரு? எவ்வளவோ சொல்லியிருக்காரு. மனித வாழ்க்கை உயர்ந்தது. மனிதன் உயர்வானவன். ஒவ்வொருவரும் இதை நிலைநிறுத்தப் பாடுபடனும் நல்லது செய்ய @4ಟ விட்டாலும் தீங்கு செய்யப்படாது என்றெல்லாம் சொல்வாரு.” "அவரு சாமியாரு போலிருக்கு!’ ‘சாமியாரு இல்லை. நல்ல மனுஷன். அதுதான் சொல்றேனே, அறிவாளி. அவரு சொல்வாரு-ஏமுத்து மாலை; ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்றே? நல்ல வனாக நடக்கனும், குடிக்கக்கூடாது. கலாட்டா பண்ணப் படாது என்றெல்லாம் சொல்வாரு. சொல்ற போது, அவரு சொல்வது நியாயமான பேச்சு அப்படியே நடந்து கொள்ள வேண்டியது தான் என்று எனக்கும் படும். ஆனால் பழக்க தோஷம். என் போக்கில் தான் நடப்பேன். நேற்று அந்த ஐயா என்னை விடாப்பிடியாக, வாக்குறுதி செய்யும்படி வச்சிட்டாரு. பேச்சுவாக்கிலே நான் சொன்னேன், இன்னிக் குத்தான் என் பிறந்த நாள்னு. அவ்வளவு தான், அவர் தன் பேச்சை ஆரம்பிச்சிட்டாரு. இன்று நாள் புதிது; நாம் புதியவர்; இன்று புதுசாகப் பிறந்தோம் என்று நம்பு, நல்லவனாக மாறி, நல்ல காரியங்களையே செய்வேன்னு: தீர்மானம் பண்ணிக்கொள். யார் சண்டைக்கு வந்தாலும் நீ எதிர்த்து சண்டைபோடாதே வாயில் வந்தபடி ஏசாதே. ஒருவன் உன் ஒரு கன்னத்தில் அடித்தால், நீ மற்றொரு கன்னத்தையும் திருப்பிக்காட்டு. இப்படி நிறையச் சொன்னாறா அவரு பேசப்பேச என் மனமும் மாற ஆரம் பிச்சிட்டுது. ராத்திரி ர்ொம்ப நேரம் யோசித்தேன். என் போக்கை அடியோடு மாற்றிக் கொள்ளணும்னு என் அந்த ராத்மா வழிகாட்டியது. இப்படி நடப்பதுதான் நல்லதாகவும் ஆபடுது: