பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 C) வல்லிக்கண்ணன் முத்துமாலையின் பிரசங்கம் போன்ற பேச்சைக் கேட்டு அவன் மனைவி பெருமூச்செறிந்தாள். சாமி, பிள்ளை யாரப்பா, நீ தான் காப்பாத்தனும் என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டாள். முத்துமாலை தனது எண்ணங்களை, கூட்டியும் குறைத் தும், எங்கும் எப்போதும் ஒலிபரப்பத் தொடங்கினான். குடிப் பது தவறு என்றான், இப்படி, அவனது சகாக்களுக்கெல்லாம். விசித்திரமாக தொனித்த கருத்துக்களை அவன் அள்ளிச் சிதறினான். . சண்டியன் சிங்காரவேலு என்று ஒருவன். இவனுக்கு. முத்துமாலையைப் பிடிக்காது. அவனிடம் அநேக தடவைகள் இவன் சரியானபடி உதை வாங்கியிருக்கிறான். இப்போது அவனிடம் கொஞ்சம் வாலாட்டலாமே என்று நினைத்தான். இப்ப ஒரு தயாஷ் பண்ணுகிறேன், பாருங்க!' என்று. கற்றவர்களிடம் சொல்லிவிட்டு முத்துமாலையிடம் வந்தான். நீ சொல்வது உண்மை தான்னு எப்படி நம்புவது? சோதிச்சுப்: உார்க்கலாமா? என்றான். ஒ: போஷாக!' என்றான் முத்துமாலை. அடுத்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. சிங்காரம் அவன் வலது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான் 'ஹெ, இப்ப உம்ம இடது கன்னத்தையும் காட்டுவீரோ: என்றான், கிண்டலாக. முத்துமாலை அமைதியாக மறு கன்னத்தை காட்டினான். அப்படிக் காட்டினால் எதிரி அடிக்கத் துணிய மாட்டான் என்று ஞானப்பிரகாசம் சொல்வியிருந்தார். ஆனால், சிங்காரம் என்ன செய்தான்? நாணமோ, குற்ற உணர்வோ பெறாது, அந்தக் கன்னத்திலும் பளாரென ஒன்று: கொடுத்தான்.