பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O. 16? முத்துமாலைக்கு விண்விண் என்று தெறித்தது. இருந்தா லும், அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தான். பலபேர் சிரிப்பதும், சண்டியனைப் புகழ்ந்து பேகவதும் அவன் காதுகளில் விழத்தான் செய்தன. ஒருவன் ஏ பெட்டை” என்று கூவினான். நேற்று இந்தத் துணிச்சல் சிங்காரம் பயலுக்கோ மற்றவர்களுக்கோ வந்திருக்குமா? முத்துமாலையின் உள்ளம் கொதித்தது. "அமைதி!' என்றது மனசின் ஒரு குரல். இப்படி அவன் தனக்குத் தானே உபதேசித்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் பிறகு நிறையவே வந்தன. முன்பு அவனிடம் உதை வாங்கியவர்கள், ஏச்சு கேட்டவர்கள் பலரும், முத்துமாலை அடிபட்டாலும் திருப்பி அடிக்காத சாதுவாகி விட்டான் என்று தெரிந்ததும் துணிந்துவிட்டார்கள். முதுகில் குத்தி விட்டு, அடுத்த குத்தை எங்கே கொடுப்பது என்று ஒருவன் கேட்டான். ஒரு சோனிப்பயல் அவன் மேலே வெற்றிலை எச்சிலைத் துப்பி விட்டு, ஸாரி பிரதர். மன்னிக்கனும்’ என்றான். ஒருவன் என்ன, அநேகம் பேர் செருப்புக் காலால் அவன் காலை மிதித்து நசுக்கினர். அவன் முன்னே வந்து நின்று, குடித்துக் கொண்டே, நீரும் ஒரு கிளாஸ் போடுமேன்!” என்றார்கள் சிலர். அவனுக்குக் கடன் கொடுத்திருந்த சிலபேர் முன்பு அவனிடம் வாய்திறந்து கேட்கவே அஞ்சியிருந்தவர்கள் இப்போது சூடாகப் பேசினர். வாங்கிச் செலவு செய்யத் தெரிந்ததே? வாங்கிய பணத்தைக்கொடுக்க வேண்டாம்? மானம் வெட்கம் இருந்தால் இப்படிச் செய்வியா? நீ சோறு திங்கியா, வேறு என்னத்தையும் திங்கியா?’ என்று கேட்டு விட்டான் ஒருவன். தன் துணிச்சலைத் தானே மெச்சி மகிழ்ந்தும் போனான். இவ்வாறு ஐந்து தினங்கள் கழிந்தன. முத்துமாலைக்கு அவமானகரமான, துக்ககரமான நாட்கள் அவை. ஐந்தாவது தாள் இரவு. அவன் சரியாகத் துரங்கவில்லை. உருண்டு புரண்டு முனங்கிக்கொண்டிருந்தான்.