பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 9 சிறுமலை ஒன்று முடிய எட்டியிருந்தது. அதன் பாதிப்பும் ஊர்மக்களால் உணரப்படலாயிற்று. என்றாலும் சிமிண்ட் தொழிற்சாலை ஒரு புதுமையாய், வேடிக்கைக் காட்சியாய், வேலை வாய்ப்பு தருவதாய், வேண்டியவர்க்கு வேண்டிய வேளை வேண்டிய அளவு: சிமிண்ட் கிடைக்க வகைசெய்வதாய் இருந்தது. காலம் ஒடிக் கொண்டிருந்தது. பிசினஸ் லாபத்தைக் கருத்தில் கொண்ட தொழிலதிபர்கள் நஷ்டம்- லாபம் இல்லை என்றார்கள். வேலை வாய்ப்பு குறைந்தது. சிமிண்டும் தாராளமாகக் கிடைக்க வழி இல்லாது போயிற்று. உற்பத்தியைப் பெருக்குவதற்காக புது ஏற்பாடுகள் நடந்தன: இரண்டாவது 'கில்லன் பிறந்தது. முதலாவது புகைப் போக்கியை விட அளவிலும் ஆற்றலிலும் பெரியது. இது. அழகு குலைந்துபோய் வெறுமைப் பட்டுக்கொண்டிருந்த சிவபுரத்தின் இனிமையை, குளுமையை, வசீகரத்தை மேலும் சீர்குலைய வைத்தது சிமிண்ட் தொழிற்சாலை. அதை ஒட்டிய பிரதேசம் நாகரிகத் தொழில் நகரமாய் மாறி, வேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே 'அக்கம்பக்கத்துக் கிராமங்கள் பாழாகிக் கொண்டிருந்தன. பலரைக் கெடுத்தே தனி ஒருவன் பெரும் பணக்காரனாய் வளரமுடியும் என்கிற தித்திய நிரந்தர உண்மையின் பிரத்தியட்சப் பிரமாணமாக விளங்கியது. இதுவும். ஊர்க்காரர்கள் கூடிப் பேசினார்கள். மக்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு செய்வதையும், விவசாய முயற்சி களைச் சிதைப்பதையும் சுட்டிக் காட்டி தொழிலதிபருக்கும்: மாவட்ட அதிகாரிக்கும், நாட்டின் அரசுக்கும் மனுக்கள் *எழுதி அனுப்பினார்கள். கருணை கோகும் மனுக்கள் என்றாவது, எங்காவது காருண்யமுள்ள அதிபர்களின், அரசுகளின் இதயத்தைத்