பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O. 109 அவன் போவதை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் :பாத்த்துக்கொண்டு நின்றாள் அவன் மனைவி. 'டாய் அடேய், யாருடாது? ஐயா சிங்கக் குட்டிடா வாங்கடா பயல்களா என் முன்னாலே என்று அவன் குரல் வழக்கமான இடங்களில் எல்லாம் முழக்கமிட்டது. ... . " 'ஏஏ, முத்துமாலை பழையபடி போக்கிரி ஆயிட்டான்' என்ற பேச்சும் பயமும் தெருவுக்குத் தெரு வேகமாகப் பரவ லாயின. அவன் அட்டகாசங்கள் அதிக வேகத்தோடு, வலுவோடு தலைவிரித்தாடின. -

அந்தப் பக்கமா வர நேர்ந்த ஞானப்பிரகாசம், என்னு முத்துமாலை இது? என்று கேட்டார்.

‘என் மனம் தானாகவே மாறி விட்டது, எல்லாத்துக்கும் மனம்தானே காரணம்! உங்க அந்தராத்மா உங்களுக்கு ஏற்ற நல்ல வழியைக் காட்டுது. என் அத்தராத்மா, காலத்துக்குத் தகுந்த, சூழ்நிலைக்கு ஏற்ற, எனக்கு நல்லதான் வழியை எனக்குக் காட்டுது. அவங்க அவங்க வழி அவங்க அவங் களுக்கு என்று சொல்லி, பெரிசாகக் கும்பிட்டு வைத்தான் முத்துமான்ை. [