பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 115 காந்திமதிநாத பிள்ளைக்குத் தான் அவர் செலுத்திய தொகையின் கணக்கு தெரியும். கடன் வாங்கியது ரூபாய் ஆயிரம். அதற்கு வட்டி இவ்வளவு என்று கணக்கிட்டிருந் தார் அவர். பிள்ளை சொந்த வியாபாரம் தொடங்கியபோது பேரேட்டில் பொறித்த முதல்வரி பூர் உமையொரு பாகர் மூலம் வரவு ரூ 1000 என்பது தான். இப்போது பூர் உமை யொரு பாகர் அவர்களுக்குக் கடன் முதலும் வட்டியுமாகத் திருப்பிக் கொடுத்த வகையில் ரூ........" என்று கணக்கு முடிக்கவும் அவர் தவறவில்லை. காந்திமதிநாத பிள்ளை இவ்வளவு தூரம் கணக்குகண்டிப்பு-கறார்’ என்று இருந்த போதிலும், நல்ல மனிதர் தான் என நிரூபிக்கவும் தவறினார் இல்லை. அந்த ஊரில் பெரிய பள்ளிக்கூடம் ஒன்து நிறுவினார். படிப்புச் செலவுக் குப் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வி கிடைக்க வசதி செய்தார். வேலை இல்லாமல் திண்டா டியவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதற்காக, அங்கு தொழிற் சாலை ஒன்றும் அமைத்தார். ஏழை எளியவர்களுக்குத் தாராளமாக உதவி புரிந்த அவர் பூர் உமையொரு பாகரை மறந்துவிடவில்லை. பெரிய திருவிழாவில் ஒரு நாள் செலவை ஆண்டுதோறும் ஏற்றுக் கொள்ள இசைந்தார் அவர். 'புண்ணியமூர்த்தி: தயாநிதி!' என்று எல்லோரும் அவரை வாழ்த்தினார்கள். அவர் புகழ் எங்கும் பரவியது. "பணம் சோந்தால் எல்லாம் தானாக வந்து சேரும். பணக்காரர்கள் எனக்கு உதவவில்லை இன்று இடற்:ை கொண்டாடுகிறார்கள். ஆனால் அன்றும் இன்றும் ஒரே