பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 () வல்விக்கண்ணன் தொட்டது உண்டா என்ன? அவர்களுக்கும், அவைகளுக்கும். மனிதாபிமானம் ஊதுகின்ற இதயம்தான் உண்டா என்ன? ஆகவே, புகைப்போக்கிகள் பெரும் அளவில், சிமிண்ட் துளசி கலந்த வெண்புகையை இரவு பகல் எந்நேரமும் வெளியேற்றிக் கொண்டுதான் இருந்தன. சிவபுரமும் சுற்றி புள்ள ஊர்களும் அதனால் பாதிக்கப்படத்தான் செய்தன. சிவபுரம் அதிகமாக பாதிக்கப்பட்டது- ஆலையின் வெகு அருகாமையில் அது இருந்ததால். - - மக்கள் முணமுணத்தனர். புகைந்து, கொதித்து ஏசிவிட்டு, சும்மா இருந்தனர். கால ஓட்டத்திலே, ஆந்தலிலும் அளவிலும் பெரிய மூன்றாவது கில்லன் கட்டும் வேலை வேகமாக நடை பெற்றது. ی زrtiس صلى الله عليه وسلم نيقي سسك நம்பி வாழ்வோரும் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளுக்கு ஒலி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்த நாளையிலே, ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்த சிலர் கூடினார்கள். நிலைமையை விளக்கி மனுக்கள் தயாரித்து, மக்களின் கையெழுத்து சேகரித்தார்கள். தோழில் அதிபர், மாவட்ட அதிகாரி, மாண்புமிகு மந்திரிகள் எல்லோருக்கும் அனுப்பினார்கள். மாவட்ட அதிகாரியிடம் நேரில் முறையிட்டு, ஊரார் குறைகளை எடுத்துச் சொல்லி, அவரையே வந்து பார்த்து உணரும்படி கோருவதற்காக, தேர்ந்தெடுத்த சிலர் கொண்ட குழு ஒன்று சென்றது. ஆராய்ந்து, ஆவன செய்வோம் என்றார் அதிகாரி. :