பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ( வல்லிக்கண்ணன் மிகக் காட்டினான். கணக்குப்படி அவரிடம் பணத்தைச் சேர்ப்பித்தான். - அடிகள் அவன் சேவையைப் பாராட்டினார். நேர்மை, யையும் உழைப்பையும் புகழ்ந்தார். அதனால் சோமுவின் உற்சாகம் அதிகமாயிற்று. அதிகம் அதிகமாகப் புத்தகங்கள் பெற்று, தீவிரமாக விற்பனை செய்துவானான், அவனுடைய உண்மையான ஆர்வத்துக்கும் உழைப் புக்கும் நேர்மைக்கும் சாட்டையடி கொடுக்கப்பட்டது. போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வியாபாரத் துறையில் சகஜமானதுதான், பண வசூலில் கண்டிப்பாக இருக்கக்கூடிய பிசினஸ்வாலா எவராவது அப்படி நடந்து கொண்டிருந்தால் சோமு அவ்வளவு அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டான். அவன் மிக உன்னதமான பீடத்தில் ஏற்றி வைத்துப் போற்றி வணங்கிய அடிகள் அப்படி நடந்து கொண்டது. தான் அவனை பலமாகத் தாக்கிவிட்டது. அந்தத் தடவை அவன் அடிகளிடமிருந்து பெற்று வந்திருந்த புத்தகங்கள் பூராவும் விற்பனையாகவில்லை. எல்லாம் விற்றபிறகு பணம் கொண்டு போய் தரலாம் என்று. அவன் நினைத்தான். குறிப்பிட்ட தேதியில் பணத்தோடு அவன் வரவில்லை என்று கண்ட சுகானந்தர் அதுபற்றி அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். விற்பனையான புத்தகங்களுக்கு உரிய சிறுதொகை சில அவசரச் செலவுகளில் கரைந்து போயிருந்தது. அதனா லென்ன அடிகளிடம் பூராப் பணத்தையும் சேர்த்துத்