பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C :25 மேலும் முறுக்கேற்றி செயலுக்கு உந்தித்துள்ளும் புறச் சக்திகளும் துண்டுகின்ற ஒரு சந்தர்ப்பத்தில்- அறிவிலே இருட்டும், பார்வையில் குருட்டுத்தனமும், உணர்ச்சியில் வெறித்தனமும் பெற்றுவிடக் கூடிய மனிதர்கள் வசிக்கிற எந்த ஊரிலும் இத்தகைய விளைவுகள்தான் ஏற்படும். கொள்ளை- கொலை- தீ! கற்பழிப்பு- கதறல்- கயமைத்தனம். எதிர்த்தல்- தாக்குப் பிடித்தல்- தப்பி ஓடுதல். பயந்து பம்முதல்- பழி தீர்த்தல் - சரண் அடைதல்... இப்படி எவ்வளவோ செயல்கள்... உணர்ச்சி நிறைந்த மனித உருவங்களின் உயிர் இயக்கங்கள்!-- எல்லாம் அவ்வூரிலும் நிகழ்ந்து கொண்டிருத்தன. இரவு நேரம். எங்கும் ஆட்சி செலுத்தி வந்த இருள் அரக்கனின் அதீதமான சிரிப்புபோல பெரும் நெருப்பு அவ்வூரில் திடீர் திடீரென்று பொங்கி எழுந்தது. வான மண்டலத்தில் அகற்றமுடியாதவாறு பதித்து கிடந்த இருட்டை சுவைத்து விழுங்க முயல்வன போல் தீ நாக்குகள் எவ்வி எவ்விக் குதித்துக் கொண்டிருந்தன. கனல் பொறிகள் பூலோகத்திலிருந்து கிளம்பிய நட்சத்திரங்கள் என்று சொல்லும்படி பரவிச் சிதறின; மினுக்கின; காற்றோடு கலந்துபோயின. காற்றிலே குழப்பிக் கலக்க முயன்ற அவலக் குரல்களை, அரற்றல் ஒலிகளை, அழுகை ஒலங்களைப் பிரித்துப் பாகுபடுத்துவது என்பது சாத்தியமே அல்ல. அச்சத்தால் ஆட்டிப் படைக்கப்பட்ட மனிதர்களின் ஒலம்- ஆண்களின் வெறிக்கூச்சல். பெண்களின் ஒப்பாசி, கீச்சொலி, ஏச்சொலி... குழந்தைகளின் அடங்காத- அடக்க