பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 O வல்லிக்கண்ணன் களை அனுபவிக்க நேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பாராமல் இருந்து விடுவது என்பது எவ்வளவு நேரத்துக்கு சாத்தியமாகும்? நேரம் பறக்கவுமில்லை, பாய்ந்து செல்லவுமில்லைஅவர்களைப் பொறுத்தவரை. ஆ க வே, அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளுக்கு ஒரு கால அளவு இல்லை என்றே தோன்றியது. அதனால் அவர் களுடைய த்ேகத்தின் நரம்புகள் எல்லாம்-அவற்றிலே விளையாடும் உணர்ச்சிகள் எல்லாம்-முறுக்கேற்றப்பட்டு, எந்தச் சமயத்திலும், சீர்கெட்டு நிலைகுலைந்து விடக் கூடிய தன்மையில் தான் இருந்தன. சிறு சலசலப்பு கூட, தெரு வோரத்து நாயின் வெறும் குரைப்புகூட, எங்கோ யாரோ எவரையோ கூவி அழைக்கும் கூச்சல்கட அவர்களுடைய உடல்களைக் குலுக்கி எடுத்தது. எதிர்பாராத வேளையிலே காற்று, குடிபோதையில் தள்ளாடுகிறவன்போல், ஆடி அசைந்து கதவின்மீது மோதுகிற போது-கதவு லேசாகக் குலுங்கிச் சிற்றொலி எழுப்புகிறபோது-அவள் பதறிப்போய் கதவைப் பார்ப்பாள். அப்புறம் அவனைப் பார்ப்பாள். அவளைப் பார்க்கும் அவனோ மண்ணையும் முகட்டை பார்க்க முயலுவான். இவ்வாறு பத்தாயத்தினுள் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும் எலிகள் மாதிரிக் கிடந்த அவர்களுடைய வீடு அடக்கமான பாதுகாப்பு - நல்லதொரு அரண்-சுகமான, தங்குமிடம் எனும் தகுதியை இழந்து பயங்கரமான சிறை மாதிரி-எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடிந்த கோட்டை மாதிரித்தான் இருந்தது. அதனுள் நெருப்பின் மீது அமர்ந்து விட்டவர்கள் போல் துயர் அனுபவித்துக் கொண்டிருந்த-என்ன நேரும் என்று தெரியாத போதிலும் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த-அவ்விருவரின் இதயத் தின் மீது விழுந்த பலத்த அடி போல், வயிற்றில் விழுந்த