பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 129 நெருப்புத் துண்டு போல், கதவின் மேல் விழுந்தது கனத்த உதை. 'ஏய், உள்ளே யாரு?" என்ற உறுமல் தொடர்ந்தது. அவள் சுவரோடு சுவராகிவிட ஆசைப்பட்டவள் மாதிசி மூலைக்குள் முடங்கினாள். அவன் மிரள மிரள விழித்தான். தொடர் இடி எனச் சட சடத்தது கதவின் மேல் விழுந்த தாக்குதல், மரியாதையாகக் கதவைத் திறக்கிறீங்களா இல்லியா? நாங்களாத் திறந்துகொண்டு உள்ளே வந்தால், அப்புறம் அவ்வளவுதான்! உள்ளே இருக்கிறது யாராயிருந் தாலும் சரி-எத்தினி பேராயிருந்தாலும் சரி-குளோஸ் தான். ஒரே போடு மண்டையைக் குழைச்சு மாவிளக்கு ஏத்திப் போடுவோம் ஆமா’ என்ற பயமுறுத்தல் அழுத்தமாய், கனமாய், வெறிவேகத்தோடு வந்தது. விளக்கு மங்கலாக எரிந்து கொண்டுதான் இருந்தது. ஆயினும் பேய்த்தனமான கும்மிருட்டு, தாங்க முடியாததள்ளி விலக்கிடவும் முடியாத-பாரம் மிகுந்த போர்வை மாதிரித் தங்கள் மீது கவிந்து, தங்களையே அமுக்கி திக்கு முக்காடச் செய்வதாக உணர்ந்தார்கள் அவ்விருவரும். கதவு பலமான தாக்குதலை ரொம்ப நேரமாகத் தாங்கி நிற்க முடியாமல் நிலைகுலைந்து இற்று வீழ்ந்தது. திடீரென்று ஏற்பட்ட வழியினுடாகக் காற்று வேகமாகப் பாய்ந்ததும், அவளுடைய தேகம் சிலிர்த்து நடுங்கியது. அது காற்றினால் மட்டுமே ஏற்பட்டதன்று. - இடிந்து சிதறிய வாசலின் நடுவே நிமிர்ந்து நின்றது மனித உருப் பெற்றிருந்த மிருகம், பிரகாசம் இல்லாத ஒளியில் அது நெடிதுயர்ந்து காணப்பட்டது. பின்னால் வெளி உலகில் எங்கும் நிறைந்து கவிந்து கிடந்த காரிருள் அதன் மூர்க்கத் தன்மையை அதிகப்படுத்திக் காட்டியது. இருட்டில் வேறு யாராவது நின்றார்களா-எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் - இது எதுவும் உள்ளே அஞ்சிக் கிடந்த இரண்டு பேருக்கும்