பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 131 புதிய ஒளி காட்டிக் கொடுத்தது. தனது பருமனான உதடு களை அவன் தாவினால் தடவிக் கொண்டான். அவளை நெருங்க நகர்ந்தான். அவள் பயங்கரமாய் கிரீச்சிட்டு அலறினாள். அந்தக் கூச்சல் அவ் வெறியனைக் கூட உலுக்கி நிறுத்தியது ஒரு கணம். அவளுடைய கணவன் பயந்து வெலவெலத்துப் போனான். அவள் அவனைப் பார்த்தாள்-பயத்தோடு, பரிதாபகரமாக, வேதனையோடு. அவன் உதவி புரிய மாட் உானா என்ற ஏக்கத்தோடு-உதவி புரியவேண்டும் என்ற கெஞ்சுதலோடு-வந்த பார்வை. கணவன் என்கிற அந்தஸ்து பெற்றிருந்த அவன் உள்ளத்திலே உரிய கிளர்ச்சியை உண்டு பண்ணவில்லை. தன்னல உணர்வுதான் தலையெடுத்து நின்றது அவனிடம். அவன் தலையைத் துரக்கி நெடுகிலும் கவனித்தான். வெளியே நின்று எவரோ எட்டிப் பார்ப்பது போல் தோன் றியது அவனுக்கு. அறையினுள் நின்ற முரடன் செயல் திறம் இழந்துகிடந்த பெண்ணையே காமக்கனல் ஜொலிக்கும் வெறிக் கண்களால் நோக்கியபடி நின்றான். தன்னிடமிருந்து அவள் தப்பிவிட முடியாது என்ற நம்பிக்கையோடும், தனக்குக் கிட்டப்போகிற சுவைமிகுந்த விருந்தைப் பற்றி ஆசை நினைப்பு எழுப்பிய மகிழ்ச்சியோடும் அவன் அவளது உடலை உடலின் ஒவ்வொரு அங்கத்தையும்- பார்வையால் ருசித்துக் கொண்டிருந்தான். அவள் தனது தைரியத்தை எல்லாம் பிடித்து இழுத்து ஒன்று திரட்டிக்கொண்டு எழுந்து தன் கணவன் அருகே வந்துவிட ஆசைப்பட்டாள்; முயற்சித்தாள். அவள் கணவன் அசைந்தான். தனது காரியத்துக்குச் சாதகமாக இருக்கட்டும் என்று தானோ -அல்லது, அவன் திடீரென்று தன்னைத் தாக்கினாலும் தாக்கி விடக்கூடும் என்ற பயத்தினால்