பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 வல்லிக்கண்ணன் தானோ-அல்லது, எதற்கும் முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருப்பது நல்லது என்ற நினைப்பினால் தானோ என்னவோ, அவ்வெறியன் முதலில் கணவனைக் கவனித்து ஒரு முடிவு கட்டிவிடவேண்டியது அவசியம் என்று தீர்மானித்தான். 'ஏய், என்னடா நீ?’ என்று கத்திக்கொண்டு அவனை நோக்கி அடி எடுத்து வைத்தான். கோரமான இரும்பு முட்கள்போல் வளைந்திருந்த விரல்களை நீட்டி அவனுடைய கழுத்தை இறுகப்பற்றி நெரித்துக் கொல்லத். துணிந்தவன்போல் அம் முரடன் முன்னேறினான், என்ன முறைக்கிறே? என்று உறுமினான். இயல்பாகவே பயந்து செத்துக் கொண்டிருந்த கணவன் இப்போது விதிர் விதிர்த்தான். முரட்டு நாயைக் கண்டதும் அஞ்சி ஒடுங்கித் தனது வாலைச் சுருட்டிப் பின் கால்களுக்கு நடுவே எவ்வளவு திணித்துக் கொண்டு, கண்களில் பணிவு. காட்டி, தலையைத் தாழ்த்தியபடி ஒதுங்கி ஒதுங்கிப் போகும் அப்பாவி நாயின் பரிதாபத் தோற்றத்தை நினைவு படுத்துவ, தாக இருந்தது அவனுடைய அவ்வேளையத் தோற்றம். தற்காப்பு உணர்வும், தப்பிப் பிழைக்க வேண்டும் எனும் ஆசையும் அவன் உடலில் புதியதோர் சக்தியைப் புகுத்தின போலும! இல்லையெனில் அவன் அவ்விதம் நடந்து கொளவது எவ்வாறு சாத்தியமாகியிருக்கக்கூடும்?... அவன் குபீரென எழுந்து அம்பு போல் வேகமாகப் பாய்ந்தான். திறந்து கிடந்த வாசலின் வழியே ஒடி இருளினுள் மறைந்து விட்டான். தன்னைத் தாக்குவதற்காகத் தான் அப்ப்டி அவன் வில்லிசை மாதிரித் துள்ளி எழுகிறானோ என்று ஒரு கணம்: மலைத்து நின்று விட்ட முரடன் அவனுடைய செயலைக் கண்டதும் கடகடவென்று சிரித்தான். உற்சாகத்தோடு ரசித்து வெறித்தனமாகச் சிரித்தான். -