பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O. 188 கணவனின் போக்கு மனைவியின் உயிரைப் போல் கடிக்கக் கூடிய அதிர்ச்சியாகத் தோன்றியது. அவள் உள்ளம் செத்து விட்டது. அலறி அடித்து அழவேண்டும் போலிருந்தது. அவளுக்கு. தன்னைத் தடுப்பவர் எவருமில்லை என்ற துணிவோடு, உற்சாகத்தோடு, தீமைபுரியத் திட்டமிட்ட வெறியன் அவன் மீது கை வைத்தான். - தீக் கங்கு மேலேபட்டது போல் துடித்து அவதினான் அவள். தன்னைவிட்டுவிடும்படி கதறினாள். - அவனோ அi ன் கூச்சலையும் துயரத் துடிப்புகனையும் வேடிக்கையாகக் கண்டு நகைத்து அவளையே பார்த்தபடி இருந்தான் ஒருகணம். பொங்கி எழுந்த வெறியோடு, உணர்ச்சிக் கொதிப்போடு, மிருகத்தன்மையோடு அவன் அவளைப்பற்றி இழுத்தான்; தழுவமுயன்றான். அப்பொழுது அவன் எதிர்பாராத - எதிர்பார்த்திருக்க் முடியாத-சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவன் மண்டையில் ஊடாரென்று ஒரு அறை விழுந்தது. அவன் முதுகிலும் பட்டது தொடர்ந்து. அவன் வேதனையோடு திரும்பிப் பார்த்தான். அவனுடைய பிடி சோர்ந்து தளரவும், அவள் விலகி விழுந்தாள். பதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அவள் பார்வை கையில் தடி ஏந்தி வெறியனைத் தாக்கி நின்ற மனிதனைக் கவனித்தன. - - -- முன்பு அவனைத் தெருவிலும், தோட்டத்திலும் அங்கு மிங்கும் அநேக தடவைகள் சந்தித்திருப்பதாக அவளுக்குப் பட்டது. அதற்குமேல் எண்ணிக் கொண்டிருக்க அவகாச மில்லை அவளுக்கு. அங்கிருந்து தப்பி ஓடவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வு தூண்டியது. ஒடமுடியுமா, க-9