பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 137 வவியினாலும் அசதியாலும் சோர்வுற்று அங்கேயே படுத்து விட்டாள். அவன் காத்து நின்று பார்த்தான், காலதாமதம் வீண் ஆபத்துக்களுக்கே வழி வகுக்கும் என்று கருதியதால், அவன் இவளை அணுகிக் குனிந்தான். அவனும் முரடன் மாதிரியே நடந்துகொள்வான் என்று எண்ணியிருந்த ஆவன் அவனுடைய செய்கையைத் தவறாகக் கருதி அச்சத்தால் அலறினாள், மூர்ச்சையானாள்.அதுவும் நல்லதே என்று தினைத்து அவன் அவளை மெதுவாகத் துரக்கி எடுத்துச் சுமந்து சென்றான். பத்திரமான இடம் ஒன்றில் அவளைத் துங்க விட்டுவிட்டு அவன் போய்விட்டான்...... - பாதி வழியிலேயே அவள் விழித்துக்கொண்டாள். அவன் தனக்குத் தீங்கு தினைக்கவில்லை நல்லது செய்யவே எண்ணியிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. எனினும் அவள் மயங்கிக் கிடப்பதுபோலவே நடித்தாள் பாதுகாப் பான இடத்தில் அவளைச் சேர்த்துவிட்டு, அவன் வெளியே சென்று கதவைச் சாத்திய பிறகுதான் அவள் எழுந்து உட்கார்ந்தாள். இனி என்ன நேருமோ என்ற பீதி அவளுக்கு இருந்தது. மனக்கலக்கமும் உணர்ச்சிக் குழப்பமும் அவனை அசத்தின. துரக்கம் வராது-தன்னால் துணங்க முடியாதுஎன்று எண்ணிக் கொண்டிருந்த அவளுக்கு அமைதி அளிப் பதற்காக, துக்கமும் எப்படியோ வந்து அருள் புரிந்தது. துயில் கலைந்த செல்லம்மா தரையில் கிடந்தபடியே சுவர்களையும் கூரையையும் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ஒளிக்கற்றையில் மிதந்த துசிப்படலத்தை அவள் சிரத்தை யோடு கவனித்தாள். நேரம் என்ன இருக்கும் என்று அவளுக்குத் தெரியாது. என்ன ஆகியிருந்தால்தான் என்ன? நான் என்ன செய்யப் போகிறேன்! என்ற திணைப்பு நெஞ்சில் வலி ஏற்படுத்தியது. அவளுடைய கணவன் ஒரு கோழையாக இல்லாதிருந்தால்! அல்லது அவனும் அவளுடனேயே இருந்து அவளுக்காகப் போராடி அம்முயற்சியிலே:ே உயிர்