பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 0 வல்லிக்கண்ணன் தேவை. அன்பு காட்டவும் அவளிடம் அன்பு செலுத்தவும் ஒரு ஆண் தேவை. - காத்தலிங்கம் அவள் மன நிலையைப் புரிந்து கொண். டான். அவளுடைய உளப் பண்பையும் உணர்ச்சிகளையும். உணர்ந்து போற்றக் கூடியவன் அவன். ஆகவே அவர்கள் இருவரும் வாழ்க்கையில் நல்ல துணை வர்கள் ஆனார்கள். వ ஒரு வருஷத்துக்குப் பிறகு ஒரு நாள். அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றான் ஒருவன். மெலிந்து சோர்ந்து, அழுக்கடைந்து வேஷ்டியும் சிக்குப்பிடித்து தலையும் குழிவிழுத்த கன்னங்களும்- கட்டை கட்டையாக இருந்த தாடியும் உடைய உருவம். திண்ணையில் நின்ற செல்லம்மா அவனைப் பார்த்ததுமே இனம் கண்டு கொண்டாள். எனினும் அதை அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. - “இங்கே இப்ப ஒண்னுமில்லே, போ போ” என்று: எவனோ பிச்சைக்காரனுக்கு உத்திரவிடுவது போல் உணர்ச்சி பற்ற குரலில் கூறினாள் அவள். அவன் திடுக்கிட்டான். திகைப்படைந்தான். செல்லம், என்னைத் தெரியவில்லையா உனக்கு?’ என்றான். அவன் குரலில் நடுக்கம் இருந்தது. அவனுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தினால் எழுந்ததாக இருக்கலாம் அது. - - 'உன்னைத் தெரிந்திருப்பதும் ஒன்றுதான். தெரியாமல் இருப்பதும் ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை...' என்று பேசியவள் சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டாள். நீ