பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 143 செத்துவிட்டாய்!” என்று தான் அவள் சொல்ல விரும்பினான, அதை அவனிடம் சொல்ல வேண்டியதில்லை என்ற நினைப்பு பேச்சுக்குத் தடை விதித்தது.

  • செல்லம், நீ திமிர் பிடிச்சுப் பேசுவது சரியல்ல. என்ன இருந்தாலும் நான் உன்னைத் தொட்டுத்தாலி கட்டி, உன்னோடு கூட வாழ்ந்தவன்...'-அவன் ஆங்காரமாய் கூசசலிடத் தொடங்கினான்.

"சீ நிறுத்து! நீயும் ஒரு மனுசன்னு மூஞ்சியைக் காட்ட வந்துட்டியே, உன் பெண்டாட்டி செல்லம் செத்து ஒரு வருஷம் ஆச்சு அவள் எக்கேடும் கெடட்டுமின்னு விட்டு விட்டு பயத்து ஒடிப்டோன வீரசிங்கம் ஒரு வருஷம் கழிச்சப் புறம் தேடி வந்து உரிமை கொண்டாடத் துணிஞ்சிட்டுது: ா, வெட்கமில்லே?" என்று ஆத்திரத்தோடு கத்திய செல்லம்மா காறித்துப்பினாள். விடுவிடென்று உள்ளே போனாள். - சட்டி பானைகள் உருளும் ஓசை கடமுடவென்று ஒலித்தது. ஏதோ பானையிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் அவள். இந்தா, இதைச் சொல்லித்தானே நீ உரிமை கொண்டாட வந்தே. இதை நீயே எடுத்துக் கொண்டு போ. இனிமே உனக்கும் எனக்கும் ஒட்ம்ே இல்லை, உறவும் இல்லை" என்று கூறி அதை அவன் மூஞ்சியில் விட்டெறிந்தாள். - அழுக்கு படிந்த மஞ்சள் கயிறு அது. அவன் சுபயோக சுபவேளையிலே அவளுக்குக் கட்டிய தாலிக் கயிறுதான்! முத்து மாலை க்குப் பேச வாயில்லை. போராட உணர்ச்சி எழவுமில்லை. த ைலகுனிந்தவாறே அங்கிருந்து நகர்ந்தான். அதன் பிறகு அவன் அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை. அதற்காகச் செல்லம்மா வருத்தப் படவுமில்லை. 枋