பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் தேடியவன் அழகின் ரசிகன் அவன். அப்படித் தான் அவன் சொல்விக் கொண்டான் அழகானந்தன் அவன் பேயர். அது கூட அவனாக வைத்துக் கொண்ட பெயர்தான்.

  • அழகு என்றும் எப்போதும் ஆனக்சும் தரக் கூடியது. அமைகி உண்டாக்க வல்லது. அழகை தரிசித்து, சந்தோஷம் அனர்த்து, அமைதியாக வாழ்வதே எனது குறிக்கோள்?

இவ்விதம் அவன் அடிக்கடி சொன்னான். கடல் புறங்களில் திரிந்தான். மலைப் பிரதேசங்களில் சஞ்சரித்தான். சுற்றுலா ஸ்தலங்களுக்குப் போனான். காலத்தால் பழுதடைந்து, அதனால் புராதனப் பெருமையோடு திகழ்ந்த, இடிந்த கட்டிடங்களையும், சிதைந்த சிற்பங்களையும், வெற்றிடங்களையும் பார்த்து அலைந்தான். - கற்றுலாப் பயணிகளோடு போனான் அவன். நண்பர் களோடு திரிந்தான். நண்பர் ஆணையின்றித் தனியாகவும் போய்வந்தான். ஒருவகைப் பரபரப்போடு அவன் பயணங் களில் ஈடுபட்டான். குற்றாலத்தில் அருவியின் அருகே நின்று கவனித்தான். சண்பகாதேவி அருவிக்குச் செல்லும் மலைவழியில் ஏறிக் களைத்தான். மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு பகுதிகளில், காட்டுப்பாதைகளில் நடந்தான்.