பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 145 கன்னியாகுமரிக் கடற்கரை ஓரம் கும்பலோடு கும்பலாம்: காத்துநின்றான். சூரியன் மேற்கே அடைவதையும், கிழக்கில் முழு நிலவு பூரித்து எழுவதையும் ஒரே சமயத்தில் கண்டு களிக்கலாம் என்று. அன்று மேகங்கள் கவிந்துகொண்டன. அடிவானத்தில் பாய்ந்து பதுங்கும் சூரியனையும் பார்க்க முடியவில்லை. கீழ்வானில் மோகனமாய் மேலே எழும்பூரணச்சந்திரனையும் காண இயலவில்லை. எல்லோருக்கும் ஏமாற்றம். கண்டபடி ஏசினார்கன், சூரியனை, சந்திரனை, மேகங்களை எல்லாவற்றையும் திட்டித். இர்த்தார்கள். காத்திருந்தது வீணாய்ப் போச்சு என்ற மனக்குறை அவர்களுக்கு. அவனுக்கும் ஏமாற்றம்தான். அநேக சமயங்களில் இப்படித் தான் ஆகிவிடுகிறது என்று முனகியபடி அவன் மனம் குமைந்தான். குற்றாலத்திலும் கும்பல் மிகுதி பற்றி, நெருக்கடி பற்றி, தாகரிக ஆக்கிரமிப்புகள் பற்றி, அழகுகள் சிதைவுறுவதைப் பற்றி அவன் மனம் அலுத்துக் கொண்டது. கொடைக் கானலில் நெடுந்துரம் எங்கெங்கோ அலைய வேண்டியிருத்த தைப் பற்றியும், பயணிகளிடம் பணம் பிடுங்குவதில் ஆர்வம் காட்டிய டாக்சிக்காரர்கள் பற்றியும், அவசரம் அவசரமாக அங்கும் இங்கும் திரிய நேரிட்டது பற்றியும் முணுமுணுத்தது அவன் மனம். சில புராதனக் கட்டிடங்களிலும், கலைச் சின்னங்களிலும் தின்று கவனித்துக் காலம் போக்குவதற்கு மதிப்பு மிகுந்த தாக என்ன இருக்கிறது என்று கணக்கிட்டது. அவன் அறிவு. ஆயினும், அவன் அழகை ரசிப்பதற்காக, அழகுகன் குடி யிருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிற இடங்களுக்கும்.