பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் ( 147 அழகு என்பது புறத்தே இல்லை. பார்க்கிறவர்களின் கன் களில் தான் அழகு இருக்கிறது. அதை உணர்ந்து ரசிக்கும்படி. மனம் தூண்டுகிறது? இதை குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டான் அவன். தெருவோடு ஒருத்தி குடம் சுமந்து சென்றாள். பளபன வென்று துலக்கியிருந்தாள் பித்தளைக் குடத்தை. பaரிட்டு ஒளிர்ந்த அதன்மீது சூரிய ஒளிபட்டு அதன் மினுமினுப்பை அதிகப்படுத்தியது. வேயில் எவ்வளவு அழகாக இருக்கு பாரேன். அதனாலே அந்தக் குடம் எப்படி மின்னுது அதுவே ஒரு அழகாகத் தான் தோணுது என்று உவகைப் பெருக்குடன் பேசினான் நண்பன். நம்மைச் சுற்றி எத்தனை அழகுகள்: வாழ்க்கையின் சின்னச் சின்ன இனிமைகள் அவற்றைப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷம் தருகிறது!’ என்றான். அழகானந்தன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று தன் கைகடியாரத்தைப் பார்த்தான். அவசரம் அவசரமாக எழுந்தான். w 'உதக மண்டலத்துக்குப் போகலாம்னு எண்ணம். அங்கே இப்போ மலர்க் கண்காட்சி நடக்குது. ரொம்ப அழகாக இருக்கும். பார்க்க வேண்டிய அற்புதம் அது. முதலில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய், எபீட் ரிசர்வ் பண்ணனும் என்றான். விரைந்து வெளியேறினான். குருவி இன்னும் நீரில் குளித்துக் கும்மாளியிட்டுக் கொண்டுதான் இருந்தது. அதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தான். நண்பன். T