பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொம்பவேண்டியவர் ஞானப்பிரகாசம் ஒரு எழுத்தாளர். அவர் எழுதினால், கதை கட்டுரை ஏதாவது பத்திரிகை களில் வந்தாலும் வரும்; வராமலும் போகும். அவர் எழுத்துக்கள் பத் திரிகைகளில் வந்தால், அவருக்கு. ஏதாவது பணம் கிடைத்தாலும் கிடைக்கும்; கிடைக்காமலும் இருக்கும். எழுத்தாளர் ஞானப்பிரகாசத்தைத் தேடி ஒருவர் வந்தார். அவர் புதிதாகப் பத்திரிகை ஆாம்பிக்கப் போவ. தாகச் சொன்னார். .v. . - ‘நமக்கு வேண்டியவங்க நீங்க. உங்க உதவி எப்பவும் இருக்கணும். ஒவ்வொரு இதழுக்கும் நீங்க தயவு செய்து கதை அனுப்பணும், உங்களுக்குத் தெரியாதா என்ன: ஆரம்பத்திலே பணம் கொடுக்க முடியாது தானே! இருந்தா லும் உங்க விஷயத்தை நான் மறந்துவிட மாட்டேன் லார்’ என்றார். மணிக்கணக்கிலே தொனதொனத்தார். போனார். ஞானப்பிரகாசம் கதை எழுதி அனுப்பத் தவறவில்லை. பிரசங்கி ஒருவர் புதிதாகப் பத்திரிகை தொடங்கினார். "நம்ம எழுத்தாளர் ஞானப்பிரகாசத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க, கட்டுரை வேணும் என்று கேட்டு என்றார்.