பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 149 "பணம் அவர் பணத்துக்காகத் தானே எழுதுவார்: என்று ஒரு நண்பர் கேட்டார். “ஞானப்பிரகாசம் நமக்கு ரொம்பவும் வேண்டியவர், ஐயா நம்மிடம் அவர் பணம் கிணம் ஒண்ணும் எதிர்பார்க்க மாட்டார். நீங்க கடிதத்தை அனுப்புங்க" என்று பத்திரிகை ஆசிரியர் அதிகப்பிரசங்கி திடமாக அறிவித்தார். அவர் ஏமாறவில்லை. கடிதம் போய்ச் சேர்ந்த சில தினங்களிலேயே ஞானப் பிரகாசம் கட்டுரை எழுதி அனுப்பிவிட்டார். ஞானப்பிரகாசத்துக்கு ஒரு கடிதம் வத்தது. ஒரு பத்திரிகைக்காரர் தான் எழுதியிருந்தார். 'நாம் ஏன் பத்திரிகை நடத்துகிறோம் என்று நமக்கே புரியவில்லை. பத்திரிகையை நிறுத்தி விடலாமா என்று கூட நாம் சில சமயம் நினைப்பது உண்டு. என்றாலும், பத்திரிகை நமது உயிர்மூச்சு மாதிரி இருப்பதால் அதை விடவும் மன மில்லை. பத்திரிகையில் நல்ல கதைகள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிற அப்பாவிகளும் இருக்கிறார்கள். அதனால், உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்குப் பணம் அளிக்க வேண்டிய அவசியத்தை நாம் அறியாமல் இல்லை. ஆனாலும் நமது பொருள் நிலை சரியாக இல்லை. தயவு செய்து அவ்வப்போது விஷயதானம் செய்து பத்திரிகையைக் காப்பாற்றுங்கள். நமக்கு ரொம்ப வேண்டியவர் நீங்கள் என்பதனாலேயே இவ்வளவு தூரம் எழுதுகிறோம்.” . . ஞானப்பிரகாசம் விஷயதான வள்ளலாக விளங்கத் தயங்கினாரில்லை. சு-10