பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் () 151 அவா எழுததாளர் இல்லையா? ஆகவே, அவர் சுத்த சோம்பேறியாகவும் இருந்தார். இதில் அதிசயம் எதுவுமில்லை 森 அவர் எழுத்தை பிழைப்பாக ஏற்றிருந்தார். ஆதலின் அவர் பிழைப்பு ஒழுங்காக நடக்கவில்லை. அவரது பொருளாதாரம் படுவறட்சி என்ற அந்தஸ்தை எட்டியது. அவர் எண்ணிப் பார்த்தார். கதை கட்டுரைகள் அனுப்பிக் காசு பெற முயன்றார். வெளியான கதைகளுக்குப் பணம் தருவதாகச் சொல்லி வாளா இருந்து விட்ட பத்திரிகைப் பெரியார்களுக்கு பில் தயாரித்து அனுப்பினார். ரிமைண்டர்’ எழுதினார். அவரை ரொம்பவும் வேண்டியவர் என உரிமை கொண்டாடிய அன்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினார். பதில் கூட வரவில்லை. அப்புறம் அல்லவா பணம் பற்றி: பிரஸ்தாபம்! :

  • ஆகவே, நாம் எல்லோருக்கும் வேண்டியவராக வாழ்த் தோம். நமக்கு வேண்டியவர் ஒருவருமில்லை என உணர்த் தார் ஞானப்பிரகாசம். உடனே பாதயாத்திரை தொடங் கினார், -

அப்பொழுதும் அந்த எழுத்தாளரிள் லட்சியம் மிக உயர்ந்ததாகத் தான் இருந்தது. இமயமலையை நோக்கித் وعسام: தான் நடந்தார் அவர். نسمة