பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதனை மதேவன் உள்ளத்தில் துயரம் கவிந்து கிடந்தது. அமைதி இழந்து, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் அவன். மாதவனிடமுள்ள பெருங்குறை, அவன் மனித இதயம் பெற்றிருந்தது தான். அதனால், பிறர் வேதனைகள் எல்லாம். அமையாக அழுத்தி ைஅவனை. . இப்பொழுதுகூட அவன் வேறொருவனுக்காகவே மன உளைச்சல் அனுபவித்தான். அந்த நபரின் பார்வையில் பட்டு: விடக்கூடாதே என்ற துடிப்போடு-பயம் என்று கூடச் சொல்லலாம்-அவன் தன் வழியே போய்க்கொண்டிருந்: தான். "கடன்காரன் மாதிரி அவன் வழி மேல் விழிவைத்துக் காத்திருப்பான். சரியான வழிமறிச்சான் சாமி வந்து சேர்ந்: தானே! என்று எரிச்சலோடு முனங்கியது அவன் உள்ளம். உண்மையான கசப்பின் விளைவல்ல அது. பண வறட்சி து விண்டி விட்ட எண்ணம்தான். ‘என்ன வாழ்க்கை இது, தரித்திரம் பிடித்த வாழ்வு' என்று பொருமியது அவன் மனம், அட கடவுளே, நீ எனக்கு ஏன் இளகிய மனசைப் படைத்தாய்? அப்படித்தான் ப்டைத் தாயே, என்னிடம் மிகுந்த செல்வத்தையாவது கொடுத் திருக்கக் கூடாதா-தேவையானவர்களுக்கு, தேவைப்படும் போது, தாராளமாக எடுத்துத் தருவதற்கு? கஷ்டப்படுகிறவர்.