பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ரு வல்லிக்கண்ணன் பெற்றிருந்தால், வாழ்வின் சிறுமைகள் அவனை அதிகமாகத் துன்புறுத்தமாட்டா. இல்லை, தரமுடியாது என்று சொல்வதற்கும் விசேஷ மான துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவு மாதவனுக்கு இல்லை. எனவேதான் அவன் இப்பொழுதும் மனக்குழப்பத் தினால் தவித்தான். அவனுக்கு அறிமுகமானஒரு குடும்பம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், குடும்பத் தலைவனின் தம்பி ஒருவனும் உடன் இருந்தான். - பெரியவனுக்கு மாத வருமானம் என்று ஒரு தொகை வந்துகொண்டு தானிருந்தது. ஆயினும் அது குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை. பற்றாக்குறை வருமானம், தீர்க்கமுடியாத சில்லறைக் கடன் என்ற இரண்டு சக்கரங்கள் மீது தள்ளாடிக் கொண்டிருந்த குடும்பச் சகடம் காலப்பாதையில் கிறீச்சிட்டு நகர்ந்து வந்தது. அதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி மோதிக் கொள்ளவும், மூறைக்கவும், பிறகு சமாதானம் அடையவும் சந்தர்ப்பங்கள் திறையவே வாய்த்தன. தம்பி அருணாசலம் நிரந்தரமான வேலை எதுவும் செய்பவன் அல்ல. எங்கெங்கோ திரிந்து, ஏதேதோ வேலை கள் செய்து, கிடைத்த கூலியைப் பெற்று, எப்படியோ தாளோட்டுவதில் ஆர்வம் உடையவன் அவன். உழைக்கக் கூடாது என்று எண்ணும் சோம்பேறி அல்ல் அவன். உழைக்காமலே பிறர் உழைப்பில் உண்டு கொழுக்க விரும்பும் வீணனுமல்ல. அத்தக்கொத்து வேலை செய்து பிழைக்கும் அவனுக்கு நாள்தோறும் உழைத்துக் காசு பெறுவதற்கு உரிய வாய்ப்புக்கள் கிட்டுவதில்ன்ல. அத்துடன் உள்ளுர இருந்து ஒரு வியாதி அவனை அரித்துக் கொண்டிருந்தது.