பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 158 ஆகவே, ஒய்வு ஒழிவு இல்லாமல் உழைக்க முடிவதில்லை அவனால், கிடைக்கிற பணத்தில் ஒரு பகுதியை அவன் எடுத்துக் கொண்டு மீதியை வீட்டுச் செலவுக்காகக் கொடுத்து விடுவான். அவனுக்குக் கிடைக்கிற சாப்பாட்டில் சத்தான உணவு என்பதே இராது. ஒய்வும், போஷாக்கும், மருந்தும் இல்லாமலே அவன் உடம்பு எத்தனை காலத்துக்கு ஒடி ஆடி உழைக்கும்? அவன் வியாதி அதிகரித்தது. டாக்டர் ஒருவரிடம் அவன் உடம்பைக் காட்டினான். விலை அதிகமுள்ள சில் மருந்துகளின் பெயர்களை எழுதிக் கொடுத்தார் அவர் பால், பழங்கள், முட்டை, ரொட்டி இவற்றைத்தான் தின்ன வேண்டும் என்று கட்டளையிட்டார். சோறு அல்லது இட்டிலி கூடவே கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அருணாசலத்துக்குச் சிரிப்பு வந்தது டாக்டரின் அறிவுரையைக் கேட்டு. தனது அவல நிலையை எண்ணி அழுகையும் எழுந்தது. மருத்துக்கும், பாலுக்கும் பழங் களுக்கும் அவன் எங்கே போவது பெருமூச்செறிந்தான்

  • ரொட்டி மட்டும் சாப்பிட்டுப் பார்க்கலாம். உடம்பு தேதினால் தேறட்டும், தேறாவிட்டால் எக்கேடும் கெடட்டும்’ என்று அவன் முடிவு செய்தான்.

'எனக்கு இனிமேல் சோறு வேண்டாம் என்று அருணாசலம் அறிவித்தபோது, அவனுடைய அண்ணி அதிசயித்தாள். சாப்பாடும் சேர்த்துச் சம்பளம் இவ்வளவு என்று எங்காவது வேலை கிடைத்து விட்டதா?’ என்று: கேட்டாள்.