பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 157 சரியாகக் கிடைக்க வழியில்லை. சிலபேர் ஒருவேளை டிபன் என்று தின்னத் தொடங்கினால், ஸ்வீட்டும் காரமும் மசால் தோசையும் புரூட் ஸாலடுமாக விழுங்குகிறார்கள். சீக்காளிக்கு வெறும் ரொட்டிக்குக்கூட வகையில்லை...” என்று எண்ணக் கொதி மூச்சை வீசியது அவன் மனம். 'ஸார், தயவு செய்து நீங்க ஒரு உதவி செய்யனும். உங்களாலே முடியுமா ஸார்?' என்று பையன் கெஞ்சினான். பசியாலும் உணர்ச்சியாலும் கரகரத்த அவன் குரல் மாதவனின் இதயத்தை அறுத்தது. - ‘என்ன செய்யனும் சொல்லு: சிறுவனின் பரிதாபகரமான பார்வை மாதவனின் மூகத்தில் தேங்கியது. எனக்கு ஒரு ரொட்டி... என்று இழுத்தான் அவன். வேதனைப் பெருமூச்சு உயிர்த்தான் மாதவன். சரி, வா’ என்று சொல்லி, அவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான். நாலனாவுக்கு ரொட்டி வாங்கித் தந்தான். நல்ல செயல் ஒன்றைச் செய்த மனநிறைவு அவனுக்கு ஏற்பட்டது. பையன் அதை ஆசையோடும், பசிவேகத் தோடும், மகிழ்ச்சியோடும் கடித்துக் கடித்துத் தின்பதைக் கவனித்து நின்றவனுக்கு உண்மையான ஆனந்தமும், பெருமித நினைவும் எழுந்தன. o இவ்விதம் உதவி புரிவது அவனுக்குப் புதிய விஷயமல்ல. பையிலே காசு இருந்தால், உதவி கோருகிறவர்களுக்கு அவன் உதவத் தயங்கியதில்லை. நோட்டு வாங்கத் துட்டு இல்லை; டீச்சர் கோபிப்பாங்க" என்று பயந்து அழுது கொண்டு நிற்கும் சின்னஞ்சிறு பெண்களுக்கு ஒன்றிரு தடவை அவன் நேட்ாடு வாங்கிக் கொடுத்திருக்கிறான் 'ஐயா பசி வயிற்றைக் கிள்ளுகிறது. காசு ஏதாவது...என்று