பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 O வல்லிக்கண்ணன் அருணாசலம் பசியோடு- ஆசையோடு-ரொட்டி வாங்கச் செல்வான். கடைக்காரன் கொடுக்க மறுத்ததும் அவனுக்கு எப்படி இருக்கும்?- இந்த எண்ணத்தை வைத்து விதவிதச் சித்திரங்களைத் தீட்டியது கற்பனை. அதனால் அவன் மனக் குழப்பம் அதிகரித்தது. மாதவன் இருபது ரூபாய்க்காக எங்கெங்கோ அலைத் தான். அநேக நண்பர்களிடம் முயற்சி செய்து பார்த்தான். பதினைந்து ரூபாய் தான் புரண்டது. பரவால்லே. இவ்வளவாவது கிடைத்ததே. இதை முதலில் கடைக் காரனிடம் கொடுக்கலாம் என்று நினைத்தான் அவன். அவன் திரும்பும் போது நல்ல வெயில். நடுப்பகல். தெரு முனையில் அடி வைத்த போதே, வழக்கமான இடத்தில் அருணாசலம் உட்கார்ந்திருப்பது அவன் பார்வையில் பட்டது. நம்பிக்கை இழந்து, சோர்வினால் குன்றி. பசிக் களைப்போடு அந்தப் பையன் சாய்ந்து சரிந்து கிடந்தான். அவனைப் பார்ப்பதற்கே மிகவும் சங்கடமாக இருந்தது மாதவனுக்கு. அந்த அப்பாவிவைப் பாராத்வன் போல் தலை குனிந்தபடி, வேகமாக அடி எடுத்து வைத்து நடந்தான் அவன். அவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத் திருந்த அருணாசலம், தூரத்தில் அவன் தலையைக் கண்ட வுடனயே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் மாதவன் தன் பக்கம் திரும்பாமலே செல்வதைக் கண்டதும் இவன் முகம் வெளுத்தது. லார்' என்று கூப்பிட்டான். குரல் தெளிவாக மேலோங்கவில்லை. “ஸார்......ஸார் என்று அழைத்தபடி எழுந்து நடக்க முயன்றான் அருணாசலம். தடாலென்று கீழே விழுந்து விட்டான்.